பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

195

ஆனால் அவை எப்படி கவந்தனாயிருக்க முடியுமென்று அவனால் காணமுடியவில்லை.

தையெல்லாம் அறியத்தக்க புத்தக அறிவு தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று அவன் கவலை கொண்டான். உலா முடிவில் எப்படியாவது முயன்று இவற்றையெல்லாம் படிக்கவேண்டுமென்றும் அவன் உறுதி செய்து கொண்டான்.

பாரத வீரன் கோவேறுகழுதையைத் தட்டிவிட்டான். பட்டி மந்திரி கண்டபடியே இரண்டு ஏற்றங்கள்தான் அவன் முன் நின்றன. அவற்றின் பின்புறத்திலேயே அவன் சென்றான். கையிலுள்ள பாறைகள் என்று வீரன் கூறியது பளுவுக்காக அதில் கட்டிய கற்களே. ஏற்றத்தை முன்னால் நின்று இறைத்தவர்களை அவன் காணவில்லை. இறைக்கும்போது ஏற்றம் உயர்ந்து உயர்ந்து தாழ்ந்தது. இதையே அவன் வீசுகின்ற கவந்தன் கைகளாகக் கருதினான்.

கவந்தன்மீது தாக்குவதாக எண்ணி, பாரத வீரன் கோவேறு கழுதை மீதிருந்தபடியே ஈட்டியால் ஏற்றங்களைத் தாக்கினான். ஒரு தடவை இறங்கி வரும் ஏற்றம் அவன் தோளை முறித்தது. மற்றொரு தடவை கிளம்பும் ஏற்றம் அவனையும் கோவேறு கழுதையையும் சேர்த்து அந்தரத்தில் தூக்கி எறிந்தது. மனிதனைப்போலவே விலங்கும் படுகாயமுற்று எழுந்திருக்க முடியாமல் நிலத்தில் கிடந்தது.

பட்டிமந்திரி நெடுநேரம் ஏற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்குந்தோறும், அது கவந்தனல்ல, ஏற்றம்தான் என்று அவனுக்கு உறுதியாய்த் தோற்றிற்று. பாரத வீரன் தாக்குதல்களை அவன் கவனித்தான். அவ்வளவு தொலைவிலிருந்து, அடிபட்டதையோ காயமடைந்ததையோ அவன் உணர முடியவில்லை. ஆனால் இறுதியாகக் குதிரையும் பாரத வீரனும் உயரத் தூக்கி எறியப்பட்டதை அவன் கண்டான். கோவென்றலறினான். ஓடி வந்தான். விழுந்தவன் எழுந்திருக்க முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு பதைபதைத்தான்.

அவன் பாரத வீரனை மெல்லத் தன் மடிமீது தூக்கிச் சாத்தினான். எண்ணெய் தடவி மருந்திட்டுத் துணிக்கட்டுகள், ட்டான். பக்கத்திலுள்ள சருகுகளால் தீ மூட்டி, வெந்நீர்