பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

197

நாளைப்போன்ற நிகழ்ச்சி இன்று ஏற்படவில்லை. மரமும் கல்லும் வலுவாயிருந்தாலும், அவற்றைப் பிணைத்துக் கட்டியிருந்த கயிறுகளும் நாரும் படிப்படியாக அறுந்து நைந்தன. ஏற்றம் உயரும் சமயம் கற்கள் முற்றிலும் விலகிப் பெருமுழக்கத்துடன் கீழே விழுந்தன.

அவன் தலைக்கு அருகாகத்தான் கற்கள் விழுந்தன. அவன் திறமையாகச் சட்டென்று விலகினான்.இல்லாவிட்டால் குறைந்த அளவு தோள்களாவது கட்டாயம் பெயர்ந்திருக்கும். ஆனால் விழுந்த இடத்தில் சேறு படிந்திருந்தது. அது பாரத வீரன் உடலெங்கும் சிதறிற்று. கண்களில்கூடச் சிறிது படிந்தது.

ஏற்றம் கீழே திரும்பவில்லை. அது என்ன ஆயிற்று. என்பதையும் அவன் முதலில் கவனிக்கவில்லை. ஆனால் ஏதோ பெருத்த உருவம் நீரில் விழுவதுபோன்ற ஓசைகள் கேட்டன. வேறு பல கூச்சல்களும் அடுத்து எழுந்தன. கண்களில் பற்றிய சேற்றைத் துடைத்துக்கொண்டே, பாரத வீரன் கவந்தன் உருவத்தைப் பார்த்தான். அவனுக்கு எல்லாம் விளங்கிற்று. “கவந்தன்" வயிறு வெடித்துச் செத்திருக்கிறான். அந்த ஓசையைத் தான் நான் கேட்டேன். அதோ திரும்பவும் தாக்க முடியாமல், காலையும் கையையும் விரித்து மலர்ந்து விட்டான். அதோ அழுகுரல்கள் கேட்கின்றன. அது அவன் உறவினர்களான அரக்கர்கள் அழு குரல்கள்தான். ஐயமில்லை" என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.

இந்த மகிழ்ச்சியைக் கூற அவன் பட்டிமந்திரியிடம் ஓடோடிச் சென்றான்!

பாவம்! பட்டிமந்திரி இத்தடவை போரில் முழுக்கவனம் செலுத்தவில்லை. தொப்பென்ற ஓசையையும் அழுகுரலையும் கேட்டுத்தான். திரும்பிப் பார்த்தான். இரண்டாக நின்ற ஏற்றத்தில் ஒன்று தலைகீழாய் நின்றது. மற்றதும் அதில் எப்படியோ மாட்டிக்கொண்டிருந்தது.“அந்தோ, ஏற்றம் முறிந்து யார் யாரோ கிணற்றில் விழுந்திருக்க வேண்டும். அடிபட்டிருக்க வேண்டும். இந்த வீரத்தலைவன் வீரனாயிருக்கலாம். ஆனால் கற்பனைப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அவருடன் வந்து பழிகேடுமாயிற்று. குடிகேடும் வந்துவிடும் போலிருக்கிறதே!" என்று அவன் பதைத்தான்.