பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. விடுதலைக் கீதம்

இளவரசியின் எழிலுருவமும், இளவரசியுருவில் காட்சி தந்த அன்னை திருவுருவமும் பாரத வீரன் உள்ளத்தை விட்டு என்றும் நீங்கவில்லை. ஆனால் அடிக்கடி வள்ளியின் அன்பு வடிவம் அவற்றை மறைத்து வந்தது. வீரஉலா முடித்து,

ளவரசியையும் சிங்காதனத்தையும் பெறும் வரை, வள்ளியின் நினைவை மறக்கவேண்டும் என்று அவன் எண்ணினான். இளவரசியின் அன்புக் கட்டளைகளிலே மனதைப் பக்தியுடன் பதிய வைக்கவும் விரும்பினான்.

ன்

“இன்னல்கள் அகற்றவந்த இளங்கதிர் வீரனே!” இவ்வாறு இளவரசி முதலில் பாரத வீரனை அழைத்திருந்தாள். “நீங்கள் விரைவில் வீரக்கவசம் அணியவேண்டும். வீரகுருவின் அருளும் அன்னை காளியருளும் பெறவேண்டும். என் காதில் சான்றாக, இத்தமிழகமெங்கும் சென்று வெற்றி உலா வரவேண்டும். உங்கள் வெற்றிப்புகழ் என் செவிகளையும் என் காதல் உள்ளத்தையும் நிறைக்கட்டும்” என்பது அவள் அன்புக் கட்டளை.ஆனால் அவள் அக்கட்டளையின் கடைசிப்பகுதி, அவனுக்கு ஒரு தனித்தூண்டுதல் தந்தது. அதன் அருளார்வம் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருந்தது. “எங்கும் இன்னலுக்காளான பெண்டிர், உங்களால் இன்னலம் பெறட்டும். சிறைப்பட்டவர்கள் சிறைவீடு பெறட்டும். இடருள் சிக்கிய மக்கள் இனிய நல்வாழ்வு பெறட்டும்!" பாரத வீரன் உள்ளத்தை இவ்வாசகங்கள் இச்சமயம் தனிப்பட்ட முறையில் உருக்கின.

கவந்தன் போரைப்பற்றி வீரனுக்கும் பாங்கனுக்கும் இடையே இரண்டு கருத்துத்தான் இருந்தது. ஆனால் நொந்த உடலுடன் குளத்தங்கரையில் இளைப்பாறிய பாரத வீரன் உள்ளத்தில், இரண்டுமே நிறைவளிக்கவில்லை. அவன் தன்னைத் தானே இரக்கமின்றிக் கடிந்துகொண்டான். கவந்தன் போரால்