மருதூர் மாணிக்கம்
(201
அவன்மீதுள்ள பக்தி பாங்கனிடம் சிறிது ஆட்டங்கண்டிருந்தது. ஆனால் வீரன் புதுப்போக்கு அதை முன்னிலும் வைரம் பாய்ந்த பக்தியாக்கி விட்டது.
அவன் பக்தனிடம் தன் உள்ளாராய்ச்சியையும் உள்ளக் குறையையும் எடுத்துரைத்தான்.
66
'அன்பிற் சிறந்த பாங்கனே! நீ புத்தகம் அறியாதவனென்று கருதி, உன் அறிவுரைகளை நான் மிகவும் புறக்கணித்து விட்டேன். அதற்கு இப்போது மன்னிப்புக் கோருகிறேன்.”
கற்பனைக் கோளாறு அடி உதையால் தெளிந்து விட்டது என்று பாங்கன் திடீரென்று எண்ணினான். உண்மை அது வல்ல என்பது விரைவில் தெரிந்தது.
“கவந்தன் கவந்தனல்ல, ஏற்றமே என்று நீ கூறினாய்! அது ஏற்ற மர மல்லவாயிருக்கலாம் கவந்தனாயிருக்கலாம். அதைப் பற்றி நான் வீணாக வாசித்தேன். நான் ஆராய்ந்திருக்க வேண்டியது அதுவல்ல. 'கவந்தன் ஏன் உன்கண்ணுக்கு ஏற்றமாகத் தோற்றியிருக்கவேண்டும்?' இதையே நான் சிந்தித்திருக்க வேண்டும். இதற்குமுன் இத்தகைய மாயம் இருந்ததில்லை. சிங்கம் உனக்கும் சிங்கமாகவே தோற்றிற்று. எல்லாருக்கும் சிங்கமாகவே தோற்றிற்று. யாருக்கும் பூனையாகவோ எலியாகவோ தோற்ற வில்லை! அணைகரை வெள்ளமும் அது போலத்தான். எல்லாருக்கும் அது வெள்ளமாகவே தோற்றிற்று.இப்போது மட்டும் இந்த இரண்டக மாயம் ஏற்படுவானேன்?
"உன் இயற்கையறிவை நான் இங்கேதான் பயன்படுத்தி யிருக்க வேண்டும். இதுவரை அதைக் கவனியாதிருந்துவிட்டேன். இனி உன் கருத்தையும் ஊன்றிக் கவனிப்பேன். அதனால் பலனுண்டு என்பதை இப்போது அறிந்து கொண்டேன்”
பட்டி மந்திரியின் மூளை குழம்பிற்று. அவனால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. “கவந்தனைக் கவந்தன் என்றே இன்னும் கருதுகிறார்.அதேசமயம் இயற்கையறிவுபற்றிவானளாவப் புகழ்கிறார். என் இயற்கையை அறியும் அறிவுகூட எனக்கு இல்லையே!' என்று அவன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.