பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(202

66

அப்பாத்துரையம் - 39

எனக்கு நீங்கள் கூறுவது ஒன்றும் புரியவில்லையே. விளங்கச் சொல்லுங்கள், ஆண்டே!" என்று மட்டும் அவன் வாய்விட்டுப் பேசினான்.

“உனக்கு விளக்கமாகக் கூறுவதிலேயே இனி என் நற்பணி தொடங்கவேண்டும். என் பழம்பிழைகள் அதனாலேயே அகல வேண்டும். ஆகவே கேள். கேட்டு, இனி உன் ஒத்துழைப்பையும் முழுதும் கொடு. அஞ்சாமல் உன் அறிவுரையைக் கூறவும் இது உன்னைத் தூண்டும்.

“உன்னிடம் மாயம் காட்டியது மூலம் இயற்கை யன்னை எனக்கு ஒரு எச்சரிக்கை தந்திருக்கிறாள்.

“சிங்கத்தை வென்றிருக்கிறேன். சிங்கத்தைவிடப் பொல்லாத கவந்தன் என்ற அரக்கனை ஒழித்திருக்கிறேன். இவற்றால் நான் தற்பெருமை அடைந்தால், அது தவறு.

"இவை வீரச் செயல்களாகலாம். நற்செயல்களல்ல. வெறும் வீரத்துக்குச் சான்றோர் என்றும் சிறப்பளிப்பதில்லை. அது காட்டுப்பண்பு. எலியைக் கொல்லும் பூனைக்கும், ஆட்டைக் கொல்லும் புலிக்கும் நான் என்ன சிறப்புத் தரமுடியும்? அவற்றைக் கொடுமை என்போம். தன் தன் உணவுக்காகக் கொன்ற கீழ்த்தர விலங்குகளின் செயல் என்போம். அவை உண்மையான தூய, உயரிய வீரம் ஆகமாட்டா.

நோக்கத்தில்,

உண்மையான வீரம் உயர்வு உள்ளுணர்ச்சியில், பயனில் தான் இருக்கிறது. சிங்கத்தை நான் கொன்றதால், யாருக்கும் என்ன நன்மை விளைந்தது? அல்லது யாருக்கும் என்ன நலன் விளைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் செயல்செய்தேன். இந்தக் கேள்விகளை உன் மாயமறுப்புரை என்னிடம் தூண்டிவிட்டன. இளவரசி எனக்குக் கொடுத்த தூய, உயரிய அருளிரக்கக்கட்டளை மீது அது என் கவனத்தைத் திருப்பின.

"இதோ, அந்தக் கட்டளை!

“எங்கும் ன்னலுக்காளான பெண்டிர், உங்களால் ன்னலம் பெறட்டும். சிறைப்பட்ட மக்கள் சிறை வீடு பெறட்டும். டருட்சிக்கிய மக்கள் இனிய நல்வாழ்வு பெறட்டும்.