பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

66

203

'இவற்றை நான் மறந்துவிடப்படாது. நான் மறந்தாலும் நீ மறந்துவிடப்படாது. நாம் மறந்தாலும் உலகம் மறந்துவிடப் படாது. உலகம் நமக்கு நினைவூட்ட வேண்டும். நீ எனக்கு நினைவூட்ட வேண்டும்.

66

66

'அதற்கு ஒரு நல்ல வழி வகுத்திருக்கிறேன்.”

'இந்த வாசகங்களை நான் எழுதித் தருகிறேன். மூன்று அட்டைகளில் அவற்றை ஒட்டு. எல்லா மக்களும் பார்க்க அதில் ஒன்றைக் கோவேறு கழுதையின் தலைமுன் ஒட்டித் தொங்கவிடு. நான்காண அதன் பிடரிமீது ஒன்றைக் கட்டிவை. மூன்றாவதை உனக்குத் தெரியும்படி அதன் வாலில் கட்டித் தொங்கவிடு.”

பட்டி மந்திரிக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்தது. ஆனால் அதேசமயம் இப்பேச்சு பாரத வீரனிடம் அவனுக்கு இருந்த மதிப்பை வளர்த்திருந்தது. ஆகவே அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டான். சிரிப்புக்கான காரணமாக ஒன்றை மட்டும் அவன் டைமறித்துக் கூறினான்.

“எனக்குத்தான் எழுத வாசிக்கத் தெரியாதே, ஆண்டே! நான் காண எழுதிப்போட்டு என்ன பயன்” என்று கேட்டான்.

“இந்த நாட்டில் இக்காலத்தில் எத்தனையோ பேருக்குத் தான் எழுத வாசிக்கத் தெரியாது. அதைச் சுட்டிக்காட்டுவதற்கும் இது ஒரு வழிதானே! மேலும் என்ன எழுதப் போகிறேன் என்பதைத்தான் இப்போதே சொல்லிவிட்டேன். முன்னால் இருப்பது அட்டை என்றும், எழுத்து என்றும் உனக்குத் தெரியும். அப்போது நான் கூறியது நினைவுக்கு வராமலா இருக்கும்?”

“புராணக்கற்பனை தீண்டாத இடத்தில், வீரத்தலைவர் அறிவு யாருக்கு வரும்? வீரம், அறிவு, பெருந்தன்மை, அன்பு ஆகிய இத்தனையும் இருக்க, இவர் ஏன் ஒரு மன்னர் மன்னன் ஆகக்கூடாது? கட்டாயம் ஆவார். ஐயமில்லை. அதனை ஒட்டி, நானும் குறைந்த அளவு ஒரு சிற்றரசன் ஆகாமலா இருக்கப் போகிறேன்!” என்று கனவுக்கோட்டை வளைத்தான், பட்டி! அவன் உள்ளம் மீண்டும் வானளாவி மிதந்தது.

இனி

ன்னலுற்றவர்கள், சிறைப் பட்டவர்கள், டருற்றவர்களுக்கே நம் வீரத்தை பயன்படுத்தல் வேண்டும்.