(204) ||
அப்பாத்துரையம் - 39
வீணில் சிதறிடித்தலாகாது' என்ற உறுதியுடன் பாரத வீரன் புறப்பட்டான்.அன்றைய நிகழ்ச்சிகள் இந்த உறுதியைப் பெரிதும் நிறைவேற்ற உதவின.
முதலில் ஒரு நாற்சந்தியை அவர்கள் அணுகினர். தொலைவிலிருந்தே உயிர் வாதைப்படும் ஓர் இளங்குரல் அவர்கள் செவியில் பட்டது. பாரத வீரன் விரைந்தான். பட்டி எவ்வளவு முயன்றும் அவனுடன் ஒத்து நடக்க முடிய ன் வில்லை. நாற்சந்தியில் ஒரு கொடுஞ் செயலை அவர்கள் கண்டார்கள். பதினான்கு பதினைந்துக்கு மேற்படாத ஒரு ளைஞன் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தான். அவன் உடலெல்லாம் சாட்டையடிகளால் வீங்கியிருந்தன. அருகில் நின்ற ஒரு செல்வன் அவனைப் பின்னும் அடி அவனைப் பின்னும் அடிமேல் அடியாக
அடித்துக்கொண்டிருந்தான்.
பாரத வீரன் கோவேறு கழுதை சரேலென்று மரத்தை நோக்கிச் சென்றது. அடிப்பவன் முதுகை ஈட்டிபதம் பார்த்தது. அவன் சீறித் திரும்பினான். ஆனால் அவன் கொடுத்தது சாட்டையடி, அவன் பெற்றது ஈட்டியடி, அவன் தாங்க மாட்டாமல் அலறினான். இளைஞன் செய்தி இன்னதென்றறி யாது விழித்தான்.
“ஏண்டா, இந்தச் சிறுவனை இப்படி அடிக்கிறாய்? அதே அடி உனக்கு எப்படி இருக்கிறது என்பது இப்போது தெரிகிறதா?” என்று கேட்டான் பாரத வீரன்.
66
"ஐயா, செய்தி இன்னதென்று கேளாமல் என்னை இப்படி அடிக்கிறீர்களே! இவனும் இவன் முன்னோர்களும் எங்கள் குடும்பத்தின் வழிவழி அடிமைகள். இப்போது அடிமைக் கடன் செய்ய இவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்படியிருந்தும் இவன் அயல் நாடுகளுக்குத் தப்பியோடிவிட்டான். அங்கே பணம் தேடுகிறானாம்! படிக்கிறானாம்! என்ன திமிர், பாருங்கள். ஆனால், நானா விடுகிறவன்? இங்கே அவனுக்கு உள்ளாளாக ஒரு ஆண்டிப்பயல் இருக்கிறான். அவனைப் பார்க்க எப்படியும் இவன் வருவான் என்று தெரியும். காத்திருந்து வந்த சமயம் பிடித்துக் கொண்டேன்.என் அடிமைக் கணக்கு அத்தனையையும் அடியாக வாங்குகிறேன்” என்றான்.