பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

(207

கூறினான். "ஆண்டே அரக்கர், பூதங்கள் ஆகியவற்றில் எனக்கு இப்போது நம்பிக்கை வந்து விட்டது!" என்றான்.

66

பாரத வீரன் ஆலோசனை சட்டென்று குலைந்தது. அப்படி என்ன புதிய அனுபவம் கண்டாய்?” என்று ஆர்வத்துடன்

கேட்டான்.

"ஒன்றுமில்லை. அந்தப் பையனே கூறிவிட்டான். அந்தச் செல்வன் மனிதனல்ல; மனித உருவில் வந்த அரக்கப் பூதம் என்று. ஆகவே அதில் ஐயமில்லை.”

66

“அவன் அதை உவமையாகச் சொன்னால், நீ அதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொள்கிறாயே! உன் கற்பனையுள்ளத்தில் நீ எதையும் பட் பட்டென்று நம்பி விடுகிறாய்?”

பேசுவது தன் வீரத் தலைவன்தானா, வேறு ஆளா என்று பாங்கன் முன்னால் வந்து முகத்தைப் பார்த்தான்.

66

“ஏன் இப்படி முன் வந்து வந்து என் முகத்தைப் பார்க்கிறாய். என்ன புதிய சந்தேகம் வந்துவிட்டது?” என்று பாரத வீரன் கேட்டான்.

66

'எங்கே அதே பூதம்தான் உங்கள் உருவில் வந்து பேசியிருக்கக் கூடுமோ என்று பார்த்தேன்" என்றான் அவன்.

பாரத வீரன் சிரித்தான்.

இதற்குள் மாலை ஆய்விட்டது. தொலைவில் குதிரை மீது இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் பருத்த உடல் கொழுகொழு வென்று மாலை வெயிலில் மின்னிற்று அணிந்த ஆடைகள் வெண்பட்டுக்கள். அவர்கள் பின் ஒரு மூடாக்கிட்ட பெட்டி வண்டி வந்தது. அதற்குக் காவலாக ஒரு முரட்டுக் காட்டான் வந்தான். உள்ளே ஒரு பெண் குரல் கேட்டது. அவள் குரல் சோகம் கலந்திருந்தது. வழி ஒரே காட்டு வழியாய் இருக்கிறதே! இங்கே எங்காவது நல்ல இடத்தில் இரவு தங்கிப் போகக் கூடாதா?" என்று ஈனக் குரலில் அது கேட்டது. காட்டான் அசட்டையாக, “நீங்கள்பேசாதிருங்கள். எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்றான்.