பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

(209

தன் தலைவன் அடிபடுவதைப் பார்த்துக்கொண்டு பட்டி மந்திரியால் சும்மா இருக்கமுடியவில்லை. அவன் தலைவன் மீதிருந்த காட்டானின் காலைப் பின்னின்று பற்றினான். அவனைப் பரபரவென்று நெடுந்தொலை இழுத்துச் சென்றான்.

அவன் வாழ்வில் அவன் வீரம் காட்டியது இதுதான் முதல் தடவை. ஆனால் அந்தத் திடீர்வீரம் சட்டென அகன்றது. பாரத வீரன் அருகே வருமுன் காட்டான் அவன் கையைப் பின்புறமாக வளைத்தான். “திருடனுடன் வந்த திருட்டுப்பயலே! உன்னை முதலில் ஒழிக்கிறேன்.பார்!” என்று கையை முறுக்கினான்.பட்டி மந்திரி வாதை பொறுக்காமல் 'கூகூ' என்று கூச்சலிட்டான்.

பாரத வீரன் விரைவில் நிலைமையைச் சமாளித்தான். பாங்கனை அவன் விடுவித்ததுடன் காட்டானைப் பின் கட்டு முன் கட்டாகக் கட்டினான். பின் வாளை அவன் நெஞ்சுக்கு நேர் நீட்டினான், "நீ யார்? இந்தப் பெண்மணி யார்? ஓடியவர்கள் யார்? உண்மையைச் சொல். இல்லாவிட்டால் அங்கே கிடப்பவனுடன் உன்னையும் அனுப்புகிறேன்” என்றான்.

காட்டான் வீறாப்பெல்லாம் மறைந்தது. “ஐயோ, நான் அந்த அம்மாவின் வேலைக்காரன். முன்னே சென்றவர்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. என்னை விட்டு விடுங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு” என்றான்.

உள்ளேயிருந்த பெண்மணி முதலில் எதுவும் கவனிக்க வில்லை. கவனித்தபோது, யாரோ திருடர்கள் தான் தாக்கு கிறார்கள். என்று அஞ்சி ஒடுங்கியிருந்தாள். பாரத வீரன் பேச்சு இந்த எண்ணத்தை மாற்றியது. அவன் யார், எப்படிப்பட்டவன் என்று தெரியவில்லை. ஆனால் வேலையாள் நடந்துகொண்ட மாதிரி சரியாகவும் ல்லை. அவனை வேலையாள்தான் என்பதிலும் தனக்குப் பாதுகாப்பில்லை யென்று அவள் கருதினாள். ஆகவே பாரத வீரனுக்கேற்பப் பேசித் தப்ப எண்ணினான்.

"ஐயாமாரே! அந்தத் திருடனை அங்கேயே பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். என்னைப் போக விடுங்கள்” என்றாள்.

"அப்படியே செய்கிறோம், அம்மணி! ஆனால் நீங்கள் நான் சொல்கிறபடி நடக்கவேண்டும். முதலில் நீங்கள் யார்? இவர்கள் கையில் எப்படிச் சிக்கிக் கொண்டீர்கள்?” என்றான்.