பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(210) || __ _

அப்பாத்துரையம் - 39

அவனுக்கேற்பக் கதை அளந்தால் அவனிடமிருந்து எளிதில் தப்பிச் செல்லலாம் என்று அவள் நினைத்தாள். அதற்கேற்ப மெய்யுடன் பொய் கலந்து பேசினாள். "நான் குறுங்குடி மலைத் தலைவன் மகள். கணவன் வீட்டிலிருந்து செல்கிறேன். தாய் உயிர் போகும் தருணம். அதனால் குறுக்கு வழியே செல்ல வேண்டி வந்தது. இந்தக் காட்டான் வழிகாட்டி. காட்டு வழியில் என்ன காரணத்தாலோ கொண்டு வந்து விட்டான்" என்றாள்.

66

அவனை நாங்கள் பின் கைகட்டி வேறு வழியில் அனுப்பி விடுகிறோம். நீங்கள் மறுதிசையில் சென்று, முதல் ஊரில் தங்கிச் செல்லுங்கள். உங்கள் தாயைப் போய்ப் பாருங்கள். ஆனால் உங்கள் கணவன் வீடு செல்லு முன், முதல் வேலையாக நீங்கள் ஒரு காரியமாக செய்ய உறுதி தர வேண்டும். அப்போதுதான் போகமுடியும்” என்றான்.

'தாயைப் பார்த்தபின் எதுவேண்டுமானாலும் உறுதி கூறுகிறேன். இப்போது விரைவில் அனுப்பிவிடுங்கள், தாய் என்ன ஆனாளோ?' என்று பெருமூச்சுவிட்டாள்.

"இங்கிருந்து பதினைந்து நாழிகை வழியில் செல்வ மருதூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே மருதநாட்டு இளவரசியின் அரண்மனையை விசாரித்துச் செல்லுங்கள். உங்களை நான் கொலைகாரரிடமிருந்து விடுவித்ததை அவர்களிடம் கூறுங்கள். விடுவித்தது பாரத வீரன், கண்கண்ட கற்கி, சிங்கத்தை வென்ற வீர சிங்கம், கவந்தனை ஒழித்த காவலன் என்பதையும் கூறத் தவறாதீர்கள். இதுவே நீங்கள் செய்யவேண்டிய காரியம்” என்றான்.

அவள் அவசர அவசரமாக உறுதிகூறிக் கொண்டாள். வண்டியைத் தட்டிவிட வண்டியோட்டியிடம் கூறினாள்.

வண்டி சில அடிகள் சென்றபின், பாரத வீரன் மீண்டும் வண்டியை நிறுத்தச் சொன்னான்.பெண்மணிக்குப் புதிய அச்சம் தோன்றிற்று. ஆனால் அவன் புதிய கேள்வி அவளுக்கு அச்சம் தரவில்லை. குழப்பம் உண்டு பண்ணிற்று.

"எங்கே, யார் விடுவித்தார்கள் என்பதை கூறுங்கள் பார்ப்போம்” என்று அவன் கேட்டான்.