பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(212

அப்பாத்துரையம் - 39

இருந்தது. தனக்கு ஒரு சிறு சொத்துக் கிடைத்தது கண்டு அவன் கூத்தாடினான்.

கைக்கட்டுடன் சென்ற காட்டான் எப்படியோ விரைவில் தன்னை விடுவித்துக் கொண்டான். பாரத வீரன் மீதும் பட்டி மந்திரிமீதும் பெண்மணிமீதும் அவனுக்கிருந்த கோபம் சொல்ல முடியாது.ஆனால் யாரையும் எதிர்க்கவும் அவன் துணியவில்லை. இரவோடிரவாக, குதிரையையும் பாங்கன் கழுதையையும் திருடியதுடன் அவன் அமைந்தான்.

காலையில் பட்டி மந்திரி முதன் முதலில் விழித்தான். புதிதாகவந்த குதிரையைக் காணவில்லை. தன் கழுதையையும் காணவில்லை அவன் தேடி அலைந்து திரிந்தான். பணமும் போயிருக்குமோ என்று தேடினான். நல்லகாலமாகத் திருடன் அதைக் காணவில்லை. அவனுக்கு ஓரளவு ஆறுதல் ஏற்பட்டது. ஆனாலும் தன் கழுதையை நினைக்கும்போதெல்லாம் அவன் விம்மி விம்மி அழுதான்.

'உலாவில் வெற்றியும் தோல்வியும் வருவது இயல்பு. இதற்காக ஏங்காதே, பட்டி!' என்று பாரத வீரன் ஆறுதலும் ஆதரவும் தந்தான்.

அன்று காலையிலேயே இன்னொரு விடுதலை வெற்றியும் பாரத வீரனுக்காகக் காத்திருந்தது.

சிறைக் கைதிகள் ஏழுபேரைக் காவற்படை ஒன்று இட்டுச் சென்றது கைதிகளை நடத்திச் சென்றதால் அவர்கள் கால்கள் பிணிக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொருவர் கைகளும் பின்புறமாக விலங்கிடப்பட்டிருந்தன. அதேசமயம் ஒவ்வொருவர் விலங்கும் அடுத்தவரின் கால்களில் ஒன்றுடன் கோர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் தனித்தனியாக ஓடமுடியாதிருந்தது. ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டுபேர் பக்கக்காவலாகவும் சென்றனர். ஆனால் ஏழாவது கைதிக்கு இவ்வளவு கட்டுக்காவலும் போதாமல் இரண்டு தோள்களிலும் உடலிலும் குறுக்கு மறுக்காகச் சங்கிலிகள் போடப்பட்டிருந்தன. அந்தச் சங்கிலிகள் ஒரு பாராங் கல்லுடன் இணைந்திருந்ததால், அந்தப் பாராங்கல்லைத் தூக்கிக் கொண்டுதான் அவன் ஒவ்வொரு அடியும் நடக்க வேண்டியிருந்தது.