பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(214

அப்பாத்துரையம் - 39

கிடைத்த தறுவாயைக் கடைசிக் கைதி நன்கு பயன்படுத்தினான். அவன் விடுவிக்கப்பட்ட தன் கையாலேயே மற்றவர்கள் சங்கிலிகளை உடைத்தான். இம்மெனுமுன் மீந்து நின்ற காவலர்கள்மீது அவர்கள் கற்களை வீசித் துரத்தினர். பதுங்கி நின்ற பட்டி மந்திரிகளையும் பாரத வீரனையும் தவிர, கைதிகளின் அருகே யாரும் இல்லை.

மற்றக் கைதிகள் பாரத வீரனுக்கு வணக்கம் கூறினர். கடைசிக் கைதி ஒன்றும் பேசாமல் பக்கத்திலுள்ள மலைப் பக்கமாக நடந்தான்.

‘பாரத வீரன் அவனைச் சென்று இடைமறித்தான். மற்றக் கைதிகளையும் அருகே அழைத்தான். உங்களை நான் விடுவித்திருக்கிறேன். நீங்கள் இனி சுதந்திரமாக நல்வாழ்வு வாழலாம். ஆனால் எனக்கு நீங்கள் செய்ய வேண்டும் கடமை ஒன்று உண்டு' என்று அவன் தொடங்கினான். இளவரசியிடம் சென்று தன் விடுதலைப்புகழ் பாடிச் செல்லும்படி கட்டளை யிட்டான்.

66

கு

கைதிகள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஆனால் கடைசிக் கைதி பேசினான். எங்களுக்கு இளவரசியும் தெரியாது. கிழவரசியும் தெரியாது. விடுதலை செய்த மட்டுக்கும் சரி. நீ நல்ல திருடன்தான். ஆனால் நாங்கள் தப்பியோடினால் ஆயிற்று. திரும்ப அகப்பட்டால் முன்னிலும் கடுமையான தண்டனையே கிடைக்கும். விடுதலையின் பேரால், அந்தச் சூழ்ச்சியில் எங்களைத் தள்ளாதே” என்றான்.

பாரத வீரன் மேலும் பேச முயன்றான். கடைசிக் கைதி அவன் நெஞ்சில் ஒருகுத்து விட்டான். அவன் எழுந்திருப்பதற்குள் அவன் மலைப் பாதையில் குறுக்கிட்டோடினான். மற்றவர்களும் அவனையே பின்பற்றினர்.

ஏமாற்றம் பாரதவீரன் முகத்தில் சற்றே படர்ந்தது. ஆனால் விரைவில் அவன் தனக்குத்தானே ஆறுதல் கூறினான். “இளவரசி இப்போதே இதைக் கேட்காமல் போனால் என்ன? கேட்கும் சமயம், இந்த நன்றியற்ற பேய் மனிதரின் தன்மையே அவர்களை விடுவித்த என் புகழை உயர்த்துவது உறுதி” என்று தனக்குத்தானே வாய்விட்டுப் பேசினான்.