மருதூர் மாணிக்கம்
6
215
தகாதவர்களுக்கு உதவி செய்யும் செயல், எவ்வளவு நல்லதானாலும் விரும்பத்தக்கதல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்” என்று பட்டி மந்திரி கருத்துரைத்தான்.
66
“நீ கூறுவதும் ஓரளவு சரிதான். எப்படியும் மூன்று தடவை ஒரே நாளில் நான் விடுதலைக் கீதம் பாடியாய் விட்டது. ளவரசிக்காகக் கூட இனி இந்த வேலையை நீடிக்க வேண்டியதில்லை. இனி முன்போல, அரக்கர் அடங்காத சிற்றரசர் முதலிய எதிரிகளை மட்டுமே தாக்குவேன். ஏனென்றால் அதில்தான் நம் புகழ் உலகெங்கும் எளிதில் பரவும். சிறு விடுதலைகளில் மாய அரக்கர்கள் இனி நம்மைத் திருப்பி விட்டு விடமுடியாது" என்றான் பாரத வீரன். பாங்கன் அறிவுரையி லிருந்து பாரத வீரன் தனக்கு வேண்டிய இந்தப் படிப்பினையை வருவித்துக் கொண்டான்.
பட்டி மந்திரிக்கு அந்நாள் நன்னாளாகவே முடிந்தது. ஏனென்றால், முன் அவன் கழுதையைத் திருடியவன் அதன் மீதே அவ்வழி சென்றான். பட்டி மந்திரி தன் கழுதையைக் கூவி அழைத்தான். தன்னை வளர்த்த அன்புத் தலைவன் குரல் கேட்டதும், அது துள்ளிக்குதித்தோடி வந்தது. முதுகி லிருந்தவன் இந்த அதிர்ச்சியில் புரண்டு விழுந்தான். எழுந்து கழுதைக்குரியவனைக் கண்டதும் அவன் ஓட்டம் பிடித்தான்.
முன்பு இறந்தவனிடமிருந்து ஐம்பது வெள்ளியும் பட்டாடைகளும் கிட்டியபோதுகூடப் பட்டி மந்திரி அவ்வளவு மகிழ்ந்ததில்லை. தன் கழுதை மீண்டும் வந்ததனால் அவனுக்கு ஏற்பட்ட களிப்பு அதைவிடப் பன்மடங்கு மிகுதியாய் இருந்தது.