11. கரதூஷணர் மாயம்
கவந்தன் போராட்டத்தில் பாரத வீரன் உடலுக்கு ஊறு ஏற்பட்டது. இதை அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை. இதனால் அவன் உள்ளம் சோர்வுபடவும் இல்லை. ஆனால் விடுதலைப்போர்கள் அவனுக்குப் பெரிதும் சோர்வூட்டின. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது அவை அவன் தலையணியைத் தகர்த்தன. இது அவன் உயர்வின் மதிப்புக்கு ஊறு தருவதாயிருந்தது. இரண்டாவதாக விடுதலைப் போர்கள் அவன் உள்ளத்தைப் புண்படுத்தின. வீரத்தால் எதிரிகளை வென்றுவிடலாம். ஆனால் சமுதாயக் கோளாறுகள் வீர வெற்றிகளால் அகல்பவை அல்ல. இவ்வுண்மையைப் பாரத வீரன் கைதிகள் வகையில் தெளிவாக, உடனடியாகக் கண்டான். விடுதலை முயற்சியின் இன்னொரு விளைவும் இதே பாடத்தை அவனுக்குக் கற்பிக்க நேர்ந்தது.
கரிசல் காடுகள் வழியே பாரத வீரனும் பட்டிமந்திரியும் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரே ஒரு இளைஞன் வந்தான். அவன் உடலெல்லாம் சூடிட்டிருந்தது. அவனால் நடக்கக்கூட முடியவில்லை. கிழவனைப்போல் ஒரு கம்பை ஊன்றிக்கொண்டு வந்தான். பாரதவீரன் அவன் நிலைமைக்குக் காரணம் என்ன என்றிய விரும்பினான். அவன் ளைஞனை அழைத்தான்.
பாரத வீரன் குதிரை முகத்தைக் கண்டதும் இளைஞன் 'கோ' வென்றழுதான். வீரனுக்கும் பாங்கனுக்கும் ஒன்றும் புரியவில்லை. “ஏன் அழுகிறாய்? தம்பி. நாங்கள் உன் நண்பர்கள். உன் துன்பத்தை எங்களிடம் சொல்லு. எங்களாலான உதவி செய்கிறோம்" என்று பாரத வீரன் கனிவுடன் சொன்னான்.
இளைஞன் அழுகை நிற்கவில்லை. ஆனால் அழுகையோடு அழுகையாக அவன் பேசினான். “அண்ணலே, நான் உங்களை