மருதூர் மாணிக்கம்
[217
அறிவேன். உங்களைப் போன்றவர் உதவி செய்திராவிட்டால், நான் இந்த அளவு இழிநிலைக்கு வந்திருக்கமாட்டேன்” என்றான்.
பாரத வீரனுக்கு இளைஞன் கூறுவது முன்னிலும் புதிராயிருந்தது.ஆனால் பட்டி மந்திரி உண்மையைச் சட்டென்று ஊகித்துவிட்டான். “ஆண்டே, இவன் தான் நம்மை செல்வனிட மிருந்து காப்பாற்றிய இளைஞன்.நாம் வந்தபின் அவனுக்கு என்ன நேர்ந்ததோ, அறிய வேண்டும்" என்றான்.
சிறுவன் பட்டி மந்திரியை ஆதரவாகப் பார்த்தான்.
66
“ஆம், அண்ணா! நீங்கள் கூறுவது சரியே. நீங்கள் போகும் போதே நான் சொன்னேன். உங்கள் அடி உதை ஒன்றைத்தான் செல்வன் மதித்தான். நீங்கள் போனால் அவன் வாக்குறுதிகள், கையொப்பங்கள் எதற்கும் விலை இல்லை. நான் சொன்னது முற்றிலும் சரி. ஆனால் நான் துன்புற்றதற்குக் காரணம் இதுவல்ல. ஏனென்றால் வாக்குறுதியையும் நான் நம்பி, ஏமாற வில்லை. கையொப்பத்தையும் நம்பியிருக்கவில்லை. நான் இலங்கைக்கு மீண்டும் ஓடிவிட எண்ணினேன். அதற்காகவே விரைந்தேன்.
“செல்வன் என்னைப் பிடிக்கக் காவலர் உதவிதேடினான். நான் திருடன் என்று அவன் அவர்களிடம் சொன்னான். என் நிழற்படம் ஒன்றையும் கொடுத்தான். நான் இலங்கை ஓடிப்போகக்கூடும் என்றும் அறிவித்தான். காவலர் நிழற்படத்தின் படிகளை எங்கும் அனுப்பியிருந்தனர். எங்கே போனாலும் அவர்கள் என்னைப் பிடித்திருப்பார்கள். போதாக் குறைக்கு என் கையில் பணம் இல்லை. ஆகவே என்னால் இலங்கை செல்லவும் முடியவில்லை. இக் காட்டில் இருக்கவும் முடியவில்லை. என்னை அவர்கள் பிடித்துச் செல்வனிடமே அனுப்பி வைத்தார்கள்.
காவலரிடம் நான் உண்மை கூறினேன். உங்கள் நன் முயற்சியைப் பற்றிக் கூட நான் சொன்னேன். அவர்கள் என்னை நம்பவும் இல்லை. நம்பினாலும் கூட மிகுதி வேறுபாடு இராது. ஏனென்றால் “அடிமை ஓடிப்போவதும் தவறு தானே!” என்று காவல்துறைத் தலைவர் கூட என்னைக் கடிந்தார்.
“செல்வரிடம் பட்ட அடியைவிட மிகுதியாகக் காவல் துறையினர் கையில் அடிபட்டேன். குற்றுயிராய் செல்வனிடம்