பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




218) ||

அப்பாத்துரையம் - 39

ஒப்படைக்கப்பட்டேன். குறையுயிரையும் போக்கவே அவன் திட்டமிட்டான். ஒவ்வொரு நாளைக்கு ஓரிடமாக உடலெல்லாம் சூடிட்டான். நான் உயிருக்கு அஞ்சி, ஓடமுயன்றேன். முடியவில்லை. ஆனால் அவனுக்கு வந்த ஒரு கெட்ட காலமே எனக்குத் தப்ப வழி தந்தது. ஒரு கொள்ளைக்கூட்டம் அவன் மாளிகையைச் சூறையாடிற்று. அந்தக் குழப்பத்திற்கிடையிலே நான் ஓடிவந்தேன்.

"எனக்கு இப்போது இலங்கை போகப்பணமும் இல்லை. இருந்தாலும் போக முடியாது. வண்டியிலும் கப்பலிலும் இந்நாட்டுக் காவல் துறையினர் என்னைப் பிடித்துக் கொள்வார்கள். அத்துடன் இந்த நாட்டிலும் நான் எந்த ஊரிலும் வாழ முடியாது. காடுகளில் நரி செந்நாய்கள் போல ஒளிந்துதான் திரியவேண்டும்.

"இவ்வளவுக்கும் என் குற்றம் என்ன? ஒன்றே ஒன்றுதான். அடிமைகளின் பிள்ளையாய்ப் பிறந்ததுதான். அதிலிருந்து தப்ப முயன்றதற்கு அந்தப் பிறப்பிற்கான தண்டனையைவிடக் கொடிய தண்டனை அடைந்தேன், அடைகிறேன்.

உங்கள் நல்ல முயற்சிக்கு உங்களுக்கும் நற்பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. செல்வர் மட்டுமல்ல, காவல் துறையினர் கூட உங்களைக் காதகன்,சண்டாளன் என்கிறார்கள். இதற்கு என்னை விடுவித்ததும் ஒரு காரணம். ஆனால் அவர்களுக்கு மிகவும் கோபமூட்டிய செயல் ஒன்றைக் கேள்விப் பட்டேன்.கொலைக் கைதிகளை நீங்கள் விடுதலை செய்தீர்களாம்.

“உங்கள் உதவி எனக்கு உதவியாயில்லை. ஓயாத் தொல்லை யாகத்தான் ஆயிற்று. ஆயினும் உங்கள் நல்லெண்ணத்தை நான் அறிகிறேன். அதனாலேயே இந்தச் செய்தியை உங்களுக்குக் கூறினேன்.

66

“அடிமை நிலையைவிட, வறுமைதான் கொடியது என்று நான் கண்டுவிட்டேன். நீங்கள் என்னை விடுவித்ததைவிட,எனக்கு ஒரு காசு கொடுத்திருந்தால், அது பயனுடைய உதவியாயிருந் திருக்கும். நிறையப் பணம் இருந்திருந்தால், நான் கொலை செய்திருந்தால்கூட, தப்ப முடிந்திருக்கும்.