பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(220)

அப்பாத்துரையம் - 39

பெயர் கேட்டதும் அவன் கழுதையைக் கோவேறு கழுதையை அடித்து விரைந்து ஓட்டினான். கழுதையின் தலை கோவேறு கழுதையின் காலை முட்டும்வரை அவன் உள்ளத்தின் படபடப்புப் பெரிதாயிருந்தது.

66

அவர்கள் ஒரு மேட்டில் ஏறினர். உச்சியடைந்து கீழே இறங்கப் போகும் நேரம், பள்ளத்திலிருந்து தூசியும் புகையும் எழுந்தது கண்டனர். பாரத வீரன் அதைச் சுட்டிக் காட்டினான். "அதோ பார், பட்டி! தூஷணன் பெரும்படையுடன் வருகிறான். தூசி எழும்பகுதி அதுதான். அதன்பின் புகை தெரிகிறதே. அதுதான் கரன்படை. இருவரும் இரு திசையிலிருந்து வந்து நம்மை முற்றுகையிடப் பார்க்கிறார்கள். இச்சமயம் நாம் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும். இருவரும் ஒன்று சேருமுன் நாம் ஒவ்வொருவராகத் தாக்கி, அவர்களைச் சிதறடித்து விட வேண்டும்” என்றான்.

"இப்போதே போர் செய்யவா போகிறீர்கள். ஆண்டே! அப்படியானால் நான் எங்கே போய் ஒளிவது? மேட்டில் இருக்கிறேனே! எல்லாருக்கும் என்னைத் தெரியுமே!" என்றான்.

"உனக்கு அறிவு இருக்கிற அளவுக்கு கோழைத்தனமும் இருக்கிறது.மேடுதான் நல்ல பாதுகாப்பு. நீ இங்கேயே இருந்தால் போதும். இந்தப் போரில் எனக்குப் புகழ் கிட்டலாம். உனக்கு அதில் பங்கு உண்டு. தவிர..."

“சரி, சரி. நான் இங்கேயே இருக்கிறேன். ஆனால் நீங்கள் முன்போல் ஆபத்தில் சிக்கி என்னைத் தவிக்க விடாதீர்கள். என்னையும் ஆபத்தில் சிக்கவைத்து விடாதீர்கள்” என்றான்.

பார்த் வீரன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. அவன் கோவேறு கழுதை மீது காற்றாய்ப் பறந்து சென்றான்.

தூசிப்படலம் அணுகி வந்தது. அத்துடன் பாரத வீரனும் அதனை அணுகிச் சென்றான். பட்டிமந்திரி கண்களுக் கு இப்போது தூசிப் படலத்தின் மெய்யுருவம் தென்பட்டது. ஒரு பெரிய ஆட்டு மந்தையினால் எழுப்பப்பட்ட தூசியே அது. சற்று அப்பால் தெரிந்த புகை ஆட்டிடையர் தங்கிச் சமையல் செய்த இடமே. இதைக் கண்டபின் அவனுக்கு மீண்டும் கவந்தன் போர்