இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(224)
அப்பாத்துரையம் - 39
வேளாளர் வண்மையை அனுபவித்த கம்பர், தம் பாராட்டை ஒரு ஏரெழுபதாகப் பாடி வைத்தார். பட்டி மந்திரிக்கு ஒரு சிறிது கவிதையாற்றல் இருந்தால் கூட, அவன் ஒரு ஆயர் காப்பியம் அல்லது ஒரு ஆயர் எழுபது எழுதி அவர்களைச் சிறப்பித்திருப்பான். ஆயர்களைப் போலக் கண் கண்ட தெய்வ இனம் வேறு இருக்க முடியாது என்பதை அவன் உள்ளூர நம்பினான்!