பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(226)

அப்பாத்துரையம் - 39

சில நாட்களுக்குள் பாரத வீரன் மீண்டும் எழுந்து செல்லப் புறப்பட்டான். பட்டி மந்திரி தன் ஆயர் குடித்தோழரிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டான். இருவரும் இச்சமயம் மதுரை நோக்கிச் செல்லும் பெருஞ்சாலை வழியே சென்றனர்.

பாரத வீரனுக்கு இப்போதிருந்த முதற் கவலை, தகர்ந்து போன தலையணி பற்றியதாகவே இருந்தது. தன் அடுத்த போராட்டம் புதிய தலையணி தந்து, தன் புகழை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று அவன் எண்ணினான். இந்திரன் வாளைப் போலவே, இந்திரன் பொன் முடியும் தன் கைப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று அவன் மனக்கோட்டைகள் கட்டினான்.பட்டி மந்திரியிடம் இது பற்றிய தன் கருத்துக்களை அவன் கூறினான்.

66

"அன்புமிக்க பட்டி! நாம் இப்போது செல்லும் பகுதி பாண்டிய மன்னர் கடைசியில் ஆண்ட பகுதி ஆகும். இந்திர வாளைப் போலவே இந்திரன் பொன்மாலையும் இந்திரன் பொன்முடியும் இந்திரன் பொன்தவிசும் பாண்டியரிடமே இருந்தது. இது வரலாறு தரும் செய்தி. பொன் மாலையையும் பொன் தவிசையும் பெறச் சோழ மன்னர் அவர்களுடன் பல போர்கள் செய்ய வேண்டி வந்தது. பாண்டியர் அவற்றை ஈழநாட்டிலும் சேரநாட்டிலும் பத்திரப்படுத்தியிருந்தனர். இதற்காகவே ஈழநாட்டையும் சேர நாட்டையும் சோழர்கள் திர்த்து வென்றனர். ஆனால் பொன்முடி யார் கையிலும் படவில்லை. அது இப்பக்கத்திலேயே எங்காவது பதுக்கப் பட்டிருக்க வேண்டும். எவ்வாறாவது அது நம் கைப்பட்டால், நம் உலா மீண்டும் கிளர்ச்சிகரமாயிருக்கும்" என்று பேசினான்.

66

“அது எங்கே இருக்கும்? எப்படி நம்மையடைய முடியும், ஆண்டே!” என்று பாங்கன் கேட்டான்.

66

‘அது எனக்குத் தெரியாது. அவ்வளவு சிறந்த பொருள் புதைபட்டிராது என்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். அதை வைத்திருப்பவர் எவ்வளவு சிறு குடிப்பட்டவரானாலும், அவர்கள் செல்வம் கொழிக்கும். அதற்காகவே யாராவது அதைக் கைப்பற்றி இருப்பது இயல்பு. அத்தகையவரை நாம் காணக்கூடும். கண்டால், போர் முறைப்படி நாம் அதை வென்று கைப்பற்ற உரிமை உண்டு" என்றான்.