பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

66

227

ப்படி விரும்பிய பொருள்களை எல்லாம் வீரர் கைப்பற்றலாமா?” என்று பட்டி மீண்டும் கேட்டான்.

“வீரருக்குரியவற்றையே வீரர் கைப்பற்ற உரிமையுண்டு. ஆனால் போரில் வீழ்ந்தவர் உடைமைகளை மட்டுமே வீரர்கள் கைப்பற்றித் தம்பாங்கருக்கும் கொடுக்கலாம்” என்றான் வீரன்.

பட்டி மந்திரிக்குப் புதுக் கிளர்ச்சி தோன்றிற்று. அவன் தன் கழுதையைப் பாரத வீரன் கழுதையுடன் நெருங்கித் தட்டிவிட்டான்.

ஆனால் பாரத வீரன் சட்டென்று நின்றான். அவன் முகத்தில் வியப்புக் குறியும் மகிழ்ச்சிக் குறியும் தாண்டவமாடின. அதோ! தொலைவில் ஏதோ மின்னுகிறதே! அது என்ன பார்த்தாயா?” என்று கேட்டான்.

66

தொலைவில், சாலை திரும்பிய இடத்தில், பேரொளி தெரிந்தது. ஆனால் அது சட்டென மறைந்தது. சில சில சமயம் விட்டு விட்டு மின்னிற்று. அருகே வர வர, அது ஒரு வீரன் தலையிலுள்ள தலையணி என்று கண்டனர். அந்த வீரனும் ஒரு கழுதை மேல் ஏறிக் கொண்டே வந்தான். 'அதுதான் பாண்டியரிடமிருந்த இந்திரன் பொன் முடியாயிருக்கக் கூடுமா?' என்று பட்டி மந்திரி பணிவுடன் கேட்டான். அவன் முகத்தில் நம்பிக்கை ஒளி வீசிற்று. பாரத வீரன் தயங்காமல், “சரியாக ஊகித்தாய், அறிவுடைய மந்திரி! வெற்றியும் புகழும் நம்மை நோக்கி விரைந்து ஓடி வருகிறது. பார்த்தாயா? நீ இப்படியே நில், நான் போருக்கு முந்துகிறேன்” என்றான்.

பாரத வீரன் பொன்முடி வீரனை நோக்கி விரைந்தான். அவன் அருகே வந்தவுடன், சாலையை விட்டு, ஒரு ஒற்றையடிப்பாதையில் இறங்கப் போனான். பாரத வீரன் ஐயம் உறுதிப்பட்டது. "அடே, ஓடிப்போகாதே நில். அந்தப் பொன்முடி எனக்கு உரியது. நான் தான் கண்கண்ட கற்கி, கலியுகராமன்! அதைக்கொடுத்துவிட்டுப் போ, அல்லது உன்னைக் கொன்று விடுவேன்!” என்றான்.

"ஏது பொன்முடி! இது என் தண்ணீர்க் குடுவை ஆயிற்றே! நீங்கள் பேசுவது ஒன்றும் எனக்குப் புரியவில்லையே” என்று வீரனாக வந்தவன் விழித்தான்.