பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(228

அப்பாத்துரையம் - 39

66

ந்தப் பாசாங்கெல்லாம் வேண்டாம். என்னைக் கும்பிட்டு அதை என் முன் வைக்கிறாயா? இல்லையா?" என்று பாரத வீரன் அதட்டினான்.

வீரன் தயங்கினான், பின் துணிந்து, 'மாட்டேன்' என்றான்.

பாரத வீரன் வீரத்தை அவன் அறிந்தவனல்ல. ஆனால் வெடிப்படையின் மொட்டைப் பகுதி இதை அவன் தோள் பட்டைக்கு அறிவித்தது. அவன் கழுதையிலிருந்து கீழே விழுந்தான். எழுமுன் ஈட்டி அவன் மறு தோள்பட்டையைத் தாக்கிற்று. அவன் கிலிகொண்டு கழுதையையும் பொன் முடியையும் போட்டுவிட்டு ஓடினான்.

ஓடியவன் திரும்பி வருவான் என்று பாரத வீரன் சிறிது நேரம் காத்திருந்தான். அவன் வரவே இல்லை. பாரத வீரன் பொன்முடியை இறுமாப்புடன் எடுத்துத் தலைமீது வைத்துக் கொண்டான். “கழுதையையும் கழுதை மீதுள்ள பொருள் களையும் நான் எடுத்துக் கொள்ளலாமா?" என்று பட்டி கேட்டான். ஓடி விட்டவன் திரும்பி வந்து கேட்டால் கழுதையை நீ திருப்பிக் கொடுக்க வேண்டிவரும். அதுவே போர் முறை ஒழுங்கு. ஆனால் வெற்றி அடையாளமாகக் கழுதையின் மீதுள்ள பொருள்களை மட்டும் நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அல்லது உன் கழுதைக்கு அதை மாற்றிக் கொள்ளலாம். இராமாயண காலத்திலிருந்து, வீரர் பின்பற்றும் மரபு இதுதான்” என்றான்.

"பட்டி சிறிது சிந்தித்தான். பின் அவன், தன் கழுதைச் சேணத்துடன், வீரன் விட்டுச் சென்ற கழுதைச் சேணத்தை மாற்றிக்கொண்டான் ஏனென்றால் அது மிகச் சிறந்ததாயிருந்தது. தவிர ஓடிய வீரன் சேணத்தில் இருபது வெள்ளியும் சில செப்புக் காசுகளும் இருந்தன.

உலாவிலே முதல் தடவையாக, வீரனும் பாங்கனும் ஒரே வெற்றி எக்களிப்புடன் சென்றனர்.

ஓடிச் சென்ற வீரன் மூலம் பாரத வீரன் புகழ் முன்னிலும் விரைவாகப் பறந்தது. ஆனால் இத்தடவை அந்தப் புகழின் தன்மை பட்டி மந்திரிக்குக்கூடத் தெரியாது. ஏனெனில் அந்த வீரன் உண்மையில் வீரனல்ல. ஆயினும் தற்செயலாக ‘வீரன்’