பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

L

229

என்பதே அவன் பெயராயிருந்தது. அவன் உண்மையில் ஓர் அம்பட்டன். அந்தப் பகுதியிலுள்ள சிற்றூர்களுக்கு தனித்தனி அம்பட்டன் கிடையாது. வீரன் ஒருவனே பத்துப் பன்னிரண்டு ஊர்களுக்குரிய ஒரே அம்பட்டனாயிருந்தான். அவனுக்கு வருவாய் மிகுதியாயிருந்தது. தண்ணீர்க் குடுவையாக அவன் ஒரு பளபளப்பான பித்தளைத் தட்டம் வாங்கினான். கிழமைதோறும் ஒரு ஊர், காலையில் ஓர் ஊர், மாலையில் ஓர் ஊர் என்று அவன் செல்ல வேண்டியிருந்தது. அதற்காகவே ஒரு நல்ல கழுதையையும் அவன் வாங்கினான். அதற்குச் செம்மரம், உயர்ந்த தோல் ஆகியவற்றால் செய்த சேணமும் செய்வித்தான். போகும்போதும் வரும்போதும் வெற்றுக் குடுவையை அவன் தலைமீது கவிழ்த்துக் கொண்டு செல்வது வழக்கம்.

பாரத வீரன் பொன்முடி என்று கருதிக் கைப்பற்றியது இந்தப் பித்தளைக் குடுவையையே. எப்போதும் அவன் அதைப் புளியிட்டுத் துலக்கியதனால், அது பொன் போலப் பளபளப்பா யிருந்தது.

அம்பட்ட வீரனுக்கு அன்று நடைபெற்ற நிகழ்ச்சி புரியா நிகழ்ச்சிகளாகவே இருந்தது. பாரத வீரனை அவன் திருடன் என்று கருதிவிட முடியவில்லை. ஏனென்றால், அன்று அவன் உடுப்பில் நூற்றுக்கணக்கான வெள்ளிகள் ருந்தன. பொருளகத்தில் அவன் சேமித்து வைத்த தொகை அது. மகன் திருமணத்துக்காக அதை அவன் நகரிலிருந்து எடுத்துக் கொண்டு சென்றிருந்தான். திருடனானால் அதைக் கைப்பற்றாமல் விட்டிருக்க மாட்டான். அவன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும். நடையுடை பேச்சுக்கள் அப்படியே இருந்தன. கற்கி, ராமன் என்ற பெயர்களும் இதையே வலியுறுத்தின. ஆகவே மொத்தத்தில் பாரத வீரன் மீது அவனுக்கு அவ்வளவு கோபமில்லை.

திரும்ப அவன் பலமணி நேரம் கழித்துத்தான் அவ்விடம் வந்தான். கழுதைகூட அருகில்தான் நின்றது. அவன் இன்னும் ஆறுதல் பெற்றான். கழுதையின் சேணம் மட்டும்தான் காணவில்லை. அது அவனுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ஆயினும் அவன் வந்த நாட்டத்தை எங்கும் பறைசாற்றவே எண்ணினான். அவன் மீது பொறாமைப்