பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(230)

//--

||

அப்பாத்துரையம் - 39

பட்டவர்களுக்கு அது ஒரு ஆறுதலாயிருக்கட்டும் என்று அவன் நினைத்தான்.

பத்து ஊர்களிலும் அவன் ஏறாத வீடு, பேசாத ஆள் இல்லை. எங்கும் அவன் கற்கியின் புகழ் பரப்பினான். கதை சொல்லச் சொல்ல, அதற்கு வால் நீண்டது. தலை வளர்ந்தது. வக்கணையும் வரிசையும் மிகுந்தன. ஒரு சிறிய கற்கி ராமாயணமாக, கற்கி பாரதமாக, அது தென் பாண்டி நாடெங்கும் பரந்தது.

சில நாட்களில் அந்த இனிய கதையை அதன் வீரனும் பாங்கனுமே கேட்க நேர்ந்தது. அவர்கள் அருமை பெருமைகளை அவர்கள் அறிந்த அளவைவிட அது உயர்வு படுத்திற்று. அவர்கள் எல்லையில்லா இறும்பூதும் மகிழ்ச்சியும் எய்தினர்.