13. வாகைப் போர்
பாரத வீரனும் பட்டி மந்திரியும் சென்ற பாட்டைதிடுமென மேல் நோக்கிற்று. இருபுறமும் உள்ள சாலைகளின் தன்மையிலும் மாறுதல் காணப்பட்டது. மரங்கள் வானளாவி ஓங்கி நின்றாடின. அவர்கள் உலாவில் ஒரு புதிய திருப்பத்துக்கான சின்னமாக அவர்கள் புகுந்த நாடு அவர்களுக்குக் காட்சியளித்தது.
அக்காடுகள் தனிக்காட்டுப் பண்ணையைச் சேர்ந்தவை. தமிழகத்திலே அது போல வளமான காடோ, பண்ணையோ வேறு கிடையாது. அதன் தலைவரான மாக்கோதைக்கு அதன் பல பகுதிகளில் பல மாளிகைகள் இருந்தன. அவர் தாமே பெரும்புலவர். அருங்கலைஞர். புலவர்களையும் கலைஞர் களையும் ஆதரிப்பதில் அவர் ஒரு கற்பகத் தருவாயிருந்தார். அவர் வீர வேட்டையிலும் ஆர்வமிகுந்தவர். தனிக் காட்டிலுள்ள காட்டானைகள் அவர் குதிரைக் காலடியினோசையைக் கேட்டாலே நடுங்கின. புலவர்கள் அவர் வீரத்தைப் புகழ்ந்து பாடினர். அதனால் செல்வமும் புகழும் சுமந்து சென்றனர். கலைஞர்கள் அவரையும் அவர் வேட்டைக் காடுகளையும், வேட்டைக்காட்சிகளையும் தீட்டினர்.வேட்டைக்காடுகளிலிருந்து வரும் பெருஞ் செல்வத்தின் ஒரு பகுதியை அவர்கள் கலையின் திறமைக்குப் பரிசாகப் பெற்றனர்.
பாரத வீரன் வீரத்தைப் பற்றிய பல வீரக் கதைகள் அவர் காதுக்கு எட்டின. பட்டி மந்திரி பற்றிய இனிய செய்திகளும் அவருக்குத் தெரிய வந்தன. ஏனெனில் அணைகரை விடுதிச் செல்வர் அவர் மைத்துனர். அவர் மாக்கோதைக்கு வரையும் கடிதங்களில் அவர்களைப் புகழ்ந்திருந்தார். சிங்கத்தின் கதையை அவர் கேட்டதே அவர் அடைந்த வியப்புக்கு எல்லையில்லை. னென்றால் சிங்கம் உண்மையில் அவர் பண்ணைக்குரிய சிங்கமே, அதை அவர் நாங்குனேரியில் நடைபெற்ற விடுதலை