பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

233

வகுத்தார். பாரத வீரன் தன் காட்டெல்லைக்கு வரும் சந்தர்ப்பத்தை அவர் இதற்குப் பயன்படுத்தினார்.

மாக்கோதையின் வாழ்க்கைத் துணைவி வேண்மாள் பாரத வீரனைவிடப் பாங்கனிடம் பரிவு மிகுதி கொண்டு இருந்தாள் அரண்மனைக்குப் பால் கொண்டுவந்த ஆய் நங்கை ஒருத்தி அவன் சீரிய அரசியலறிவு பற்றிப் புகழ்ந்திருந்தாள். அதில் ஈடுபட்டு வேண்மாள் கணவன் திட்டத்துடன் ஒத்துழைக்க மனமார இசைந்தாள்.

தனிக் காட்டுச் சாலையில் மரங்களிலெல்லாம் 'வெல்க பாரத வீரன், வாழ்க பட்டி மந்திரி' என்ற வாசகங்கள் பொறித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றைப் பட்டி மந்திரியே முதலில் கவனித்தான். அவன் மகிழ்ச்சியுடன் அதைப் பாரத வீரனுக்குக் காட்டினான். “ஆயர்களாக வந்தவர்கள், கர தூஷணர்களாயிருக்க முடியாது. அவர்கள் தேவர்களே என்பதில் எனக்கு ஐயமில்லை. நம் புகழை விளக்கவே அவர்கள் இந்த மாயம் செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் தங்கள் பொருள்கள், ஆட்கள் இவ்வளவு அழிவுற்ற பின்னும், அன்பு காட்டுவார்கள்? அவர்களால்தான் நம் புகழ் இவ்வளவு விரைந்து பரவி இருக்க வேண்டும்” என்றான்.

பாரத வீரன் உள்ளம் இப்போது ஒரு மகிழ்ச்சியலையில் மிதந்து கொண்டிருந்தது. அது பட்டி மந்திரி கருத்தை எளிதாக ஏற்றுக் கொண்டது. மரந்தோறும் இந்தப் புகழ் வாசகம் எழுதப்பட்டிருப்பது கண்டபின் இந்தப் புதுக் கருத்து வலியுற்றது.

வழியிலுள்ள விடுதிகளில் காவலர்கள் அவர்களைக் கண்டதும், “வருக! வீரவீர பாரத வீரரே வருக. வருக வெற்றிவீர மேதை பட்டி மந்திரியே வருக” என்று வரவேற்றனர்.பாரதவீரன் இத்தகைய ஆரவாரத்தை என்றும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் தன் வீர உலாவில் கூடியமட்டும் விடுதிகளில் தங்கக் டாதென்று அவன் நினைத்திருந்தான். ஆகவே அவன் உள்ளே செல்ல மனமில்லாமல் நின்றான். ஆனால் பட்டி மந்திரி “அன்புடன் மதிப்பவரை அசட்டை செய்வது அழகல்ல. ஆண்டே! அன்புக்கு அன்பு செலுத்திவிட்டுச் செல்வோம்" என்று இழுத்துச் சென்றான். வகை வகையான உண்டிகள் வழங்கப் பட்டன. பாரத வீரன் அவற்றைத் தொட்டுத் தொடாமலுமே