(234) ||.
அப்பாத்துரையம் - 39
இருந்தான். ஆனால் பட்டி வயிறு கொள்ளு மட்டும் உண்டு பருகினான். பாரத வீரன் உணவுக்கான செலவைக் கொடுக்க முனைந்தான். ஆனால் விடுதியாளர் இதைப் பெற மறுத்தனர். “தாங்கள் வழிப்போக்கரல்ல, விருந்தினர். தங்களுக்கு வேண்டும் வசதிகளை நாங்கள் குறைவில்லாமல் செய்ய வேண்டியவர்கள். நாங்கள் கோருவதெல்லாம் எங்கள் விடுதியில் இரண்டொரு நாளாவது தங்கிச் செல்ல வேண்டுமென்பதுதான்" என்றார்கள்.
வரவர உபசரிப்பும் வரவேற்பும் வளர்ந்தன. சிற்றூர்
களிலெல்லாம், தெரு வளைவுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் மீது வரவேற்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மக்கள் ஆங்காங்கு குழுமி நின்று, முதற் சீடர்கள் முழங்கிய அதே முழக்கங்கள் எழுப்பினர். சில இடங்களில் சீடர்களின் இசைக் குழு பாடிய அதே பாடல்களை இசைக் குழுக்கள் பாடின. அதே பாணியில் சில புதுப்பாடல்கள் கூடப் பாடப்பட்டன. மணிப்புலவன் புலமை மணத்தை அதில் கண்டு பாரத வீரன் வியப்படைந்தான்.
தலை நகரத்தின் வழியாக அவர்கள் செல்ல எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் போக்கு இப்போது மெல்ல மெல்ல ஊர்வலப் போக்காயிற்று. மக்கள் திரள் அவ்வளவு பெருகிற்று. அது அவர்களை அறியாமல் அவர்களைத் தலைநகருக்கு ட்டுச் சென்றது. அதன் வாயில் முகப்பில் அரசவை மதிப்புடன் அவர்கள் எதிர்கொண்டழைக்கப்பட்டனர். ஆனை அம்பாரி பல்லக்குகள் அவர்களுக்காக வந்தன. பாரத வீரன் தன் கோவேறு கழுதையைவிட்டு ஆனை மீதேற விரும்பவில்லை. வற்புறுத்தலின் பேரிலேயே அதில் ஏற ஒத்துக் கொண்டான். ஆனால் தனக்கு முன்னால் செல்லும் பெருமையை அவன் தன் கோவேறு கழுதைக்கு அளித்தான். பட்டி மந்திரி தனக்கு அளிக்கப்பட்ட பல்லக்கில் மனமுவந்து ஏறினான். ஆனால் தன் பின்னாலேயே தன் கழுதையை அணி செய்து வர ஏற்பாடு செய்து கொண்டான்.
பண்ணை வேந்தனும், பண்ணை அரசியும் அரச மதிப்புடன், ஆனால் கால் நடையாகவே அவர்களை எதிர் கொண்டனர். அரண்மனையில் அவர்களுக்காக விருதுகள், ஆடல்பாடல்கள், சிறப்புகள் நடந்தன. வீரனுக்கும் பாங்கனுக்கும்