மருதூர் மாணிக்கம்
235
மட்டுமின்றி, கோவேறு கழுதைக்கும், கழுதைக்கும் கூட மாளிகைச் சிறப்புகள் தரப்பட்டன.
நான்
ஒரு நாள், இரண்டு நாள் கழிந்தவுடன் பாரத வீரன் திரும்பவும் உலாவைத் தொடர எண்ணினான். "வந்த அரண்மனை வாழ்வை நாமாக இவ்வளவு விரைவில் விட்டுச் செல்வானேன்!” என்றான் பட்டி.பாரத வீரனுக்கு முகம் கடுத்தது. “பட்டி!உன்னை எவ்வளவோ அறிவுடையவனென்று நினைத்தேன். அரசனாகப் பிறக்கவில்லை. அரண்மனையிலும் வாழவில்லை, நீயும் அந்நிலையில் பிறக்கவோ, வாழவோ இல்லை. அப்படியிருக்க, அரசராகப் பிறந்து வாழ்பவர்கள் நம்மை ஏன் இப்படிப் பெருமைப்படுத்துகிறார்கள் என்பதை மறந்துவிட்டாய். நாம் அரண்மனை வாழ்வை விரும்புவதனாலா நம்மை இவ்வளவு அருமையாகப் பாராட்டுகிறார்கள்? வீர வாழ்வு மூலம் மக்கள் வாழ்க்கையை நாம் உயர்த்துகிறோம். மக்கள் உள்ளங்களில் அரசரைவிட உயர்ந்த இடம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் பெருமையை விட்டு நாம் இங்கே இருக்க எண்ணுவது அழகல்ல” என்றான்.
பட்டி மந்திரி மிகுதி விருப்பமில்லாமலே இணங்கினான்.
நீ
பாரத வீரன் அன்று மாக்கோதையிடம் தனக்கு விடை கொடுக்கும்படி கேட்டான். “நாடோடியாகவும் காடோடி யாகவும் வாழ்பவன் நான். எனக்கு அரண்மனை வாழ்வு தந்து பெருமைப்படுத்தினீர்கள். உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக் கிறேன். ஆனால் என் வீர உலாவை நான் விரைந்து சென்று தொடர வேண்டும்.ஆகவே விடைகொடுத்தனுப்பவேண்டுகிறேன்" என்றான்.
விருந்தினரிடம் வற்புறுத்துவது போல மாக்கோதை பார்த வீரனை இன்னும் சில நாள் தங்கிச் செல்லும்படி வற்புறுத்தினான். வேண்மாளும் பட்டி மந்திரியிடம் இதுபோல வற்புறுத்தினாள்," வீரன் எங்கள் விருப்பத்துக்கு எளிதில் கட்டுப்படாவிட்டாலும், உன் விருப்பத்துக்குக் கட்டுப்படக்கூடும். எங்களுக்காக அவரை வற்புறுத்தி இன்னும் இரண்டொரு நாள் இருக்கும்படி கூற வேண்டுகிறேன்” என்றாள் அவள்.