பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




236

அப்பாத்துரையம் - 39

பாரத வீரன் பின்னும் தயங்கினான். “மன்னர் விருந்தினராக இரண்டு நாள் இருந்தோம். அரசி விருந்தினராக இன்னும் ஒரு நாள் இருந்து விட்டுப் போவோம் ஆண்டே!” என்று பட்டிபாரத வீரனிடம் நயமாக வேண்டினான்.

பாரத வீரன் ஒருவாறு இணங்கினான். இதனால், பட்டியின் மதிப்பு இன்னும் உயர்ந்தது. பாரத வீரன் இதைப் பட்டி மந்திரியிடம் சுட்டிக் காட்டினான்.பார்த்தாயா உனக்காகத்தான் இதை ஒத்துக் கொண்டேன். ஆனால் அடுத்த தடவை நீ வற்புறுத்தக் கூடாது” என்றான்.

ஆனால் மறுநாள் அவர்கள் விடைபெறவே முடியவில்லை. அவர்களுக்குச் சிறப்பளிக்க இசைக்கச்சேரிகள், நாடகக் கச்சேரிகள், ஆடலரங்குகள் நடந்த வண்ணம் இருந்தன. அவற்றின் முடிவில், மன்னனும் அரசியும் அவர்களைத் தம் தவிசண்டை இருதவிசுகள் இட்டு அமர்த்தினர்.

அரசன் அரசியைப் பார்த்தான். அரசி புன்முறுவல் செய்தாள். பின் அரசன் பாரத வீரனை நோக்கிப் பேசினான்.

“சிங்கத்தை வென்ற வீரசிங்கமே! கற்கியின் கண் கண்ட திரு வுருவமே! உம் வருகையால் எம் தனிக்காடு தனிப்பெருமை அடைந்தது. மூன்று நாட்களையும் நானும் அரசியும் மற்றும் எல்லாரும் மூன்று கணங்களாகக் கழித்தோம். எங்கள் விருந்தை ஏற்றதற்காக என் சார்பிலும், அரசி சார்பிலும், மற்ற எல்லார்சார்பிலும் உங்களுக்கு எம் நன்றி, உங்களை இரண்டு நாள் கழித்து மற்றொரு நாள் இருக்கும்படி வேண்டியருளிய பட்டிக்கும் என் தனி நன்றி உரியது."

பேச்சு இத்துடன் முடியவில்லை என்பதை பேச்சின் தொனியே காட்டிற்று. 'இனி என்ன சொல்ல இருக்கிறாரோ’ என்று யாவரும் எதிர்பார்த்தார்கள். சிறிது நேரம் வாளா இருந்த பின் அவர் மீண்டும் தொடங்கினார்.

“வீரகற்கியே! உங்களை நாங்கள் வீரர் என்ற முறையிலேயே அழைத்தோம். அது உங்களைப் பெருமைப்படுத்துவதற்கல்ல. எங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளவே அத்துடன் எங்களுக்குத் தங்களால் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் இருக்கிறது. நானும் அரசியும் நாட்டு மக்களுடன் அதற்காக