பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




238

66

அப்பாத்துரையம் - 39

வீர கற்கியே, தனிக்காட்டின் எல்லையில் என் தாய் வழியாக வந்த ஒரு சிற்றரசு இருக்கிறது. என் மரபினம் பழைய பாண்டியர் மரபின் ஒரு கிளை. அங்கே பன்னிரண்டு ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. சுற்றியுள்ள இடமெல்லாம் பெய்யும் மழையில் அங்கே ஒரு துளிகூட விழுவதில்லை. இடம் மேடானதால் வெளியிலிருந்து தண்ணீரும் வருவதில்லை.

‘மாந்துவாய்’ என்ற ஒரு பூதம் அப்பக்கம் வரும் முகில்களை உறிஞ்சிவிடுகிறது என்று ‘கணி'கள் கூறுகிறார்கள். அதற்கு ஒரே ஒரு கழுவாய்தான் இருப்பதாய் அவர்கள் கூறுகிறார்கள். அங்குள்ள சாத்தன் கோயிலில் ஒரு வெண்கலக் குதிரை இருக்கிறது. அதன் மீதுள்ள ஒரு பொறியைத் திருகினால், அது முகில் மண்டலம் சென்று விடுமாம்! ஆனால் செல்பவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டுமாம்! முகிலைக் குடிக்கும் மாந்துவாய்ப் பூதம் முகிலுடன் அதை விழுங்குமாம். உள்ளே செல்பவர் வீரராக இருந்தால் அச்சமயம் முகிலையும் பூதத்தையும் கிழித்துவிட முடியுமாம்! இந்த வீரப்பணியை நீங்கள் இருவரும் செய்து, என் தந்தையர் நாட்டுக்கு மழை பெய்விக்க வேண்டுகிறேன்” என்றாள்.

பாரத வீரன் இதற்கு இணங்கினான்.

பட்டி மந்திரி கலக்கமடைந்தான். "ஆண்டே, இந்த வேலையை உங்களைப் போன்றவர்கள்தான் செய்யமுடியும். எனக்குக் கேட்கவே பயமாயிருக்கிறது. நான் வரமாட்டேன்" என்றான்.

பாரத வீரன் முதல் தடவையாகப் பட்டி மந்திரியை எரிப்பது போலப் பார்த்தான்.

ஆனால் அரசன் பட்டி மந்திரியை எளிதில் மாற்றினான். “இந்த வீரப்பணியில் பாரத வீரனை ஊக்குவதற்காகத்தானே உனக்குச் சிற்றரசு தருகிறோம். நீ பாரத வீரனுடன் செல்லவில்லையானால், சிற்றரசு எப்படி கிடைக்கும்?” என்றான்.

பட்டியின் அச்சம் பெரிதாயிருந்தது. ஆனால் சிற்றரசின் ஆவல் இன்னும் பெரிதாயிருந்தது. அவன் வேண்டாவெறுப்பாக இணங்கினான்.