பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(240

அப்பாத்துரையம் - 39

,

இறுக்கமாகக் கட்டப்பட்டன. 'நம்பிரான்' இதன் பின்னரே சுழலத் தொடங்கிற்று. அச்சுழற்சியைக் காண்பவர்கள் தலைகளே சுழன்றன. அதன் மீதிருப்பவர் நிலையைக் கேட்க வேண்டிய தில்லை. சுழற்சிப் பொறிகளை இயக்குபவர்கூட நீடித்த பயிற்சியின் பின்பே அத்தொழிலில் அமர்ந்தனர். ஆகவே பட்டி மந்திரி அச்சுழற்சியிலேயே நிலை கலங்கினான். கண்ணைக் கட்டும்போதே கண்கள் கலங்கியிருந்தன. கவலையால் குரல் கம்மியிருந்தது. சுழற்சியின்போது அவன் கோவென கதறினான். ஆனால் தொண்டை கம்மியிருந்தாலும் அந்தக் கதறலின் ஒலியலைகள் சுழன்று சுழன்று வந்ததாலும் அது கீழிருப்பவருக்கு ஒரு புதுவகை இசையலையாகத் தோற்றின.

குதிரைப் பொறியைத் திருகுவதற்குரிய குழலூதிற்று.பாரத வீரன் பொறியைத் திருகினான். அக்கணமே குதிரை மேலெழுந்து பறப்பதாக அவர்கள் எண்ணினார்கள். பட்டி மந்திரி பொறி கலங்கினான். பாரத வீரன் செயற்கரிய செய்யும் பெருமித வீறுடன் நிமிர்ந்து, கட்டிய கண்ணுடனே பத்துப் திசைகளையும் பரக்க நோக்கினான்.

உண்மையில் குதிரை சுழற்சித் திட்டத்திற்கு மேல் பறக்கவில்லை. அரசனும், அரசியும் வகுத்திருந்த மாயத் திட்டம் இதுவே. வானத்தில் பறப்பதாக அவர்கள் நம்பும்படி எல்லாம் செய்யப்பட்டிருந்தன. பூதம் அவர்களை விழுங்குவதாகத் தோன்றும் மாயத்துக்கும் திட்டம் செய்யப்பட்டிருந்தது. இதனால் வானகத்தில் அவன் செய்யும் போரை மண்ணகத்திலிருந்தே மக்களெல்லோரும் பார்க்க முடிந்தது.

பறக்கும் குதிரையின் உயரத்துக்கு மேல் உயர்ந்த கம்பங்கள், கோபுரங்கள் நாலு திசையிலும் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வண்ண வண்ண விசை ஒளி விளக்குகள், விசை ஆவித்துரத்திகள் வைத்து இயக்கப்பட்டன. இவற்றால் நம்பிரான் மீது வெப்பக் காற்று, குளிர் காற்று, புழுக்கக் காற்று, மூடிய கண்ணை உறுத்தும் ஒளிக் கதிர்கள் ஆகியவை செலுத்தப் பட்டன. இவற்றால் பாரத வீரனும் பட்டி மந்திரியும் பலபடி உயரத்திலுள்ள காற்று மண்டலம், வான மண்டலங்களைக் கடப்பதாக எண்ணினார்கள். இறுதியிலுள்ள புழுக்கக் காற்றுத் துருத்தி அவர்களை மேகமண்டல உணர்ச்சியுடையவராக்கிற்று.