மருதூர் மாணிக்கம்
241
போகும் வழியிலேயே கண்மூடிய வண்ணம் காணும் காட்சிகளை எல்லாம் பாரத வீரன் பட்டி மந்திரிக்குச் சுட்டிக் காட்டினான். “பட்டி, மனிதர் எவரும் செல்லாத இடங்களுக்கு நாம் செல்கிறோம், பார்த்தாயா? இப்போது நாம் காற்று மண்டலம் கடந்து விட்டோம். இதோ பார், ஆவி மண்டலம். மூச்சைக் கெட்டியாக்கிக் கொள். ஆம்! இப்போது நெருப்பு மண்டலத்தை அணுகுகிறோம். ஆ, தோலை செருப்புப் பொசுக்குகிறது பார்! சற்றுப் பொறுத்துக் கொள். ஆகா, இனி சந்திர மண்டலத்தருகில் வந்துவிட்டோம். என்ன குளிர்ச்சி பார். இங்கேயே வாழ்நாள் முழுதும் இருந்துவிடலாம் போலிருக்கிறது. அப்பாடா! வந்துவிட்டோம் முகில் மண்டலத்திற்குள், இனி எந்தக் கணமும் பூதம் நம்மை விழுங்கிவிடும்! விழிப்பாயிரு” என்றான்.
அவன் கையில் வாள் இருந்தது. பூதத்தின் வயிற்றில் எளிதாகச் செல்லும்படியும், பின் அதை எளிதாகக் கிழிக்கும் படியும் அவன் அதை வாய்ப்பாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் வாகை நாடகத்தைப் பார்த்த மக்கள் தங்கள் சிரிப்பை, அடக்கமாட்டாமல் மிகவும் தவித்தார்கள். அரசனும் அரசியும் “உரக்கச் சிரிக்காதேயுங்கள்" என்று கைச்சாடை செய்துகொண்டே இருந்தார்கள். “சிரிக்காதேயுங்கள்” என்று அட்டை விளம்பரம் தாங்கிய காவலர் தங்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டே நாலாபுறமும் சென்றார்கள்.
போராட்ட நாடகத்தின் கடைசிக் காட்சி உண்மையிலேயே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பட்டுத்துணிகளாலும் மெழுகுக்கம்பிகளாலும் ஒரு பெரிய மேகம் செய்யப்பட்டிருந்தது. அதைவிடப் பெரிய இன்னொரு பூதமும் செய்யப்பட்டிருந்தது. இரண்டும் இரண்டிரண்டு பாதிகளாக இரண்டு கோபுரங்களி லிருந்து இரண்டு சட்டங்களால் நீட்டிப் பிடிக்கப்பட்டிருந்தன. முதலில் மேகச் சட்டம் பாரத வீரனையும் பட்டி மந்திரியையும் கவிந்து கொண்டது. வெளியேயுள்ள பட்டுக்கள் வெண்மையா யிருந்தன. அவற்றின் வழியே ஒளிகள் ஊடுருவின. ஆகவே மேகத்தின் வயிற்றுக்குள் அவர்கள் இருக்கும் நிலையை எல்லோரும் காண முடிந்தது. அடுத்தபடி பூதத்தின் இருபாதிகள் வந்து பொருந்தின. அவை வீரனையும் பாங்கனையும்