242 ||
அப்பாத்துரையம் - 39
மேகத்துடன் சேர விழுங்கின. பூதத்தின் வாயாக அமைந்த மின்சாரச் சங்கு அச்சமயம் பூதத்தின் குரல் போலவே ஊதிற்று. அச்சமயம் சிரிப்பை அடக்கியிருந்த மக்களை அதை ஏக்கக் குரலாகவும், அழுகைக் குரலாகவும் மாற்றி நடித்தார்கள்.
பாரத வீரன் பட்டி மந்திரியிடம் நடப்பதெல்லாம் விளக்கினான். "இதோ, நாம் மேகத்துக்குள் வந்து விட்டோம், பட்டி? இதோ, பூதம் நம்மை விழுங்குகிறது, விழுங்கிவிட்டது. ஆகாகா,எத்தனை பெரிய பூதம், பார்! அதன் வயிற்றுக்குள் நாம் போகப் போகிறோம். உஷார்? விழிப்பாயிரு!" என்று அவன்
பேசினான்.
மக்கள் அழுகுரல் அவன் காதில்பட்டது. “அந்தோ, இது என்ன? நாம் விழுங்கப்பட்டது கண்டு தேவர்களெல்லாமா அழுகிறார்கள்” என்று அதற்குப் பாரத வீரன் சிறந்த விளக்கம் தந்தான். அழுகை நடிப்பின் போது கூட மக்களால் சிரிக்காம லிருக்க முடியவில்லை. “சில தோழர்கள் சிரிக்கிறார்கள். ஞான திருஷ்டியால் நம் வெற்றியை எதிர்பார்க்கும் உயர்தரத் தேவர்கள், முனிவர்கள் இவர்கள்” என்று அவன் இதற்குமுன்புது விளக்கம் தந்தான்.
அதற்குள் மின்சாரச் சங்கு ஊதிற்று. “பார், பூதம் நம்மை வேகத்துடன் விழுங்கி எக்காளமிடுகிறது. அதை ஒழிக்கிறேன், பார்" என்று அவன் வாளை நாலாபுறமும் மேகப்பை, பூதப்பை ஆகியவற்றிலுள்ளிருந்து வீசினான்.
வேடிக்கையிடையே கூட, அவன் வீரம் கண்டு மக்கள் வியப்படைந்தார்கள். அவன் வாளால், மேகப்பை முதலில் சின்னாபின்ன முற்றது. அதன் மெல்லிய தூள்கள் வாளைச் சுற்றிப் பின்னை அதன் கூரை மழுக்கின. இதனால் பூதத்தைத் துண்டு படுத்தும் செயல் மிகவும் தடைபட்டது. ஆனால் காற்றையே வெட்டிவிடும் அளவுக்குப் பாரத வீரன் வாளைச் சுழற்றினான். அவன் கைகள் நோவுற்றன. உடல் தளர்ந்தது. அவன் நம்பிரான் குதிரை மீது சாய்ந்தான்.
பாரத வீரன் உயிர் போயிற்றோ என்று பட்டி மந்திரி நடுக்கம் மிகுதியாயிற்று. அவன் கலங்கினான். வானத்தின் உச்சி மண்டலங்களுக்கிடையில், தனிமையாய் விட்டோமோ என்று