பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246

அப்பாத்துரையம் - 39

செய்வித்து இட்டுச் சென்றான். பாரத வீரனிடமும், அரசன் அரசியிடமும், மணிப்புலவனிடமும் மற்றச்சீட நண்பர்களிடமும் அவன் பிரியா விடை பெற்றுச் சென்றான்.

பட்டிமன்னனுக்கு அளிக்கப்பட்ட நாட்டின் பழைய பெயர் மலைப்பட்டி. அது இப்போது பட்டி நாடு என்று புதுப் பெயரிடப்பட்டது. அதன் குடிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டிருந் தனர். தலைநகரில் நூறு வீடுகள் இருந்தன. அதைச் சூழ நூற்றுக்கு மேற்பட்ட சிற்றூர்கள் அல்லது சிறு குப்பங்கள் இருந்தன. மானும், மிளாவும், முயலும், தேனும், தினைமாவும், புல்லரிசியும் அங்கே மக்கட் செல்வங்களாயிருந்தன. நரிப்பல்லும் புலிநகமுமே அணிமணிகளாயிருந்தன. உப்பும் அரிசியும் மிளகும் நாணயங்களாயிருந்தன. இப்புதுமைகள் ப்புதுமைகள் கண்டு கண்டு பட்டி

மகிழ்ந்தான்.

புது மன்னனை வரவேற்கும் ஆரவாரம் மலைகளுக்கும் காடுகளுக்கும் உயிர் கொடுத்தன. பட்டி மன்னன் வாழ்க, பார்த வீரன் கண்டெடுத்த மணிமுத்து மாண்புறுக! என்ற எழுத்துக்களுடன் விருதுக்கொடிகள் எங்கும் பறந்தன. குறவர் கோமான்,வேளிர்குடி விளக்கு, நாட்டுக் குடியரசன் எனப் புலவர் அவனைப் புதுப் பெயர்களிட்டுப் புகழ் பாடினர்.

பட்டி மந்திரியின் முதல் அரசியல் ஆணை எல்லாரையும் அதிர்ச்சியுறச் செய்தது. ஆயினும் அது குடி மக்களுக்கு ஒரு புதுக்கிளர்ச்சி தந்தது. அவன் அமைச்சரை விளித்தான்."நம்மிடம் புகழ் பாடும் புலவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று அவன் கேட்டான்.

66

'நூறு பேருக்கு மேல் உள்ளனர். மணிப்புலவர் இன்னும் பலருக்குப் பயிற்சி அளித்து வருகிறார்" என்றான் அமைச்சன்.

“விழாக் காலத்துக்குத்தான் புகழ்ப் பாடல்கள் தேவை, விழா முடிந்து விட்டது. நம் நாடு மலை நாடு, இங்கே உழைத்தால்தான் செல்வம் பெருகும். புகழ் பாடினால் பெருகாது. இது உங்களுக்குத் தெரியுமல்லவா? மன்னரை உண்மையாகப் பெருமைப்படுத்தும் புலவர்கள் பாட்டாளிகள் தான். ஆகவே புதுப்புலவர்களை உண்டு பண்ண வேண்டும். உழைப்பவர் மட்டும் நம் நாட்டில் இருக்கட்டும். மற்றவர்களை மணிப்புலவன்