மருதூர் மாணிக்கம்
247
தலைமையில் தற்போது ஏதேனும் பரிசு கொடுத்து பாரத வீரனையே பாடும்படி அனுப்பிவிடுங்கள்” என்றான்.
அமைச்சன் முதலில் மிரள மிரள விழித்தான். பின் ஏதோ கூற நாவெடுத்தான்.பட்டி, "நான் மன்னனா? நீங்கள் மன்னரா?' என்று கேட்டான்.
அமைச்சன் மறு பேச்சுப் பேசவில்லை. புலவர்களாகக் கருதப்பட்ட அத்தனை பேரையும் மணிப்புலவனையும் பாரத வீரனிடமே அனுப்பிவைத்தான்.
“ஆயிரம் குடி மக்களாம், அதில் ஒரு நூறு புகழ் பாடும் சோம்பேறிகளாம் இந்நிலை ஒழிந்தது. “தோட்டத்தில் பாதி கிணறாயிருந்தால் கூடப் பயனில்லை. அது குத்துக் கல்களா யிருந்தால் என்ன ஆகும்?" என்று பட்டிமன்னன் தன் செயலுக்கு அரசியல் விளக்கம் தந்தான்.
அவன் அடுத்த செயல் மன்னனான தனக்கு அளிக்கப்பட்ட விருதுப் பெயர்களை ஒழிப்பதாயிருந்தது. இதுவும் அரசர் ஆணை விளம்பரமாக்கப்பட்டது. "தாய் தந்தையரிட்ட பெயரை விட உயர்ந்த பெயர் ஒருவருக்கு எப்படி இருக்க முடியும்? விருதுப் பெயர்கள் நம் மனைவி மக்கள் நாவில் ஏறாதே? அவற்றை உச்சரிப்பதற்குள் அவர்கள் உண்ட சோறு வீணாய் விடுமே. ஆகவே இந்த வீண் பெயர்கள் வேண்டாம். மன்னரும் மனிதராகவே இருக்கட்டும்” என்றான்.
பாரத வீரன் பாங்கன் பாரத வீரன் தத்துவங்களுக்கு அடிமைப்பட்டவனல்ல. பாரத வீரன் வீரத்தைத் தாண்டிய புரட்சிக் கருத்துக்கள் அவன் கல்லா உள்ளத்தில் தாண்டவ மாடின என்று குடிகள் கண்டார்கள். அமைச்சர்கள் அவனிடம் பேச அஞ்சினார்கள்.
பட்டம் விருதுகளைப் போலவே பகட்டாடை அணிமணிகளையும் பட்டி மன்னன் விலக்கினான். பதவியின் சின்னமாக ஒரே ஒரு பட்டாடையை மட்டும் மேற்கொண்டான். அதையும் மன்னனாக வீற்றிருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவன் வெறுத்தான். மனிதருள் மனிதனாக உடுத்து, உண்டு மற்றவர்கள் போல வேலை செய்யத் துணிந்தான். அத்துடன் அவன் வேலை குடி மக்கள் ஐவர் செய்யும் வேலைக்கு இணையாய்