பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(248

அப்பாத்துரையம் - 39

இருந்தது. தன் வருவாயை அவன் தனியாக ஒதுக்கி வைத்தான். அத்துடன் ஆட்சிக்காக அமைச்சன் ஊதியத்தில் மூவிரட்டி எடுத்துக்கொண்டான். மன்னர் ஆடம்பரச் செலவு குறைந்ததால், இந்தத் தொகை விரைவில் பெருகிற்று.

66

'முதல் கொலு மன்றத்தையே அவன் தன் முறை மன்றம் ஆக்கினான். என் குடி மக்களிடையே குறைப்பட்டோர் வருக, வழக்காடுபவர் வருக" என்று அவன் அறிக்கையிட்டான்.

நிலப்பூசல், உரிமைப் பூசல்களை அவன் தீர்த்த வகை புதுமை வாய்ந்ததாயிருந்தது. “உன்னால் எவ்வளவு உழமுடியும்? அதை நீ வைத்துக் கொள், உன் உழைப்பால் எவ்வளவு பலன் வரும்? அது உன் வருவாய்" என்று அவன் எளிதாகத் தீர்ப்பு வழங்கினான். வழக்குரைஞர், அறிஞர் அடிக்கடி இடைமறித்தார்கள். “சட்டம், பழயை வழக்கம், மரபு” என்று பேசினர். "இவற்றுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள். "கட்டாயம் கொடுக்க வேண்டும். அவை நமக்குத் தரும் மதிப்பு என்ன? அவற்றால் பொதுவாக மக்களுக்கு என்ன நன்மை?” என்று அவன் கேட்டான்.

அவன் பேதமையை எதிர்க்க எல்லாரும் அஞ்சினார்கள்.

தனி மனிதர் வழக்குகளில் அவன் மிரட்சியடைவது உறுதி என்று அரசியல்வாதிகள், சட்ட அறிஞர்கள் கருதினர். முதல் வழக்கை அவர்கள் ஆவலுடன் கவனித்தனர்.

ஒரு கிழக்குறவனும் தையல்கார ளைஞனும் வழக்காளராக வந்தனர். இளைஞன் தன் வழக்கைக் கூறினான்.

“அறிவாற்றல் மிக்க அரசே சில நாட்களுக்கு முன் இந்தப் பெரியார் ஒரு முழுச் சதுக்கமுள்ள ஒரு துணியைக் கொண்டு வந்தார். 'இது ஒரு தொப்பிக்குப் போதுமா?' என்றார். 'தாராளமாகப் போதும் என்றேன். 'இரண்டு' தொப்பிகளுக்கு வருமா!" என்றார். 'தட்டிக் கட்டி வரும் என்றேன். அவர் அதனுடன் விடவில்லை. 'மூன்று கூடத் தைக்கலாமே!' என்றார். ‘தைக்கலாம்' என்றேன். அதன் பின் 'நாலு' ஐந்து, எனத் தொப்பிகளின் எண்ணிக்கை ‘ஏழு' வரை சென்றது. 'ஏழு போதுமா?' என்றேன். 'போதும்' என்றார். நான் அவர் கூறியபடியே தைத்துக் கொடுத்தேன். ஆனால் தைத்தபின் அவர்,

,