பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

249

தொப்பிகள் வேண்டாம். கூலியும் தரமாட்டேன். துணியைக் காடு' என்று மல்லுக்கு நிற்கிறார்' என்றான்.

'இவன் கூறுவது உண்மைதானா?' என்று கேட்டான், பட்டிமன்னன்.

"ஆம், அரசே! ஆனால் முழு உண்மை அறிய அந்தத் தொப்பிகளைக் காட்டச் சொல்லுங்கள்” என்றான், கிழவன்.

இளைஞன் தன் சிறு சட்டைப்பைக்குள்ளிருந்து ஏழு சிறு துணுக்குகளை எடுத்துக்காட்டினான். ஐந்து தொப்பிகள் ஐந்து விரல்களிலும் போடத் தக்கவையாயிருந்தன. இரண்டு பச்சைக் குழந்தைளின் சுண்டுவிரலுக்கே பொருத்தமாயிருந்தன. 'இவை தான் தொப்பிகள்' என்று கூறியவுடனே, எல்லாரும் சிரித்தனர். ஆனால் பட்டிமன்னன் சிரிக்கவில்லை.

66

'உன் நாட்டு மக்கள் இளைஞன் செயலைத்தான் பாராட்டுகிறார்கள், பார்த்தாயா? நீ என்ன சொல்கிறாய்” என்று மன்னன் கிழவனைப் பார்த்துக் கேட்டான்.

“நான் எனக்கென்று கூறித் தானே கேட்டேன்? இவை எனக்கு என்ன பயன்? தீர ஆராய்ந்து நீதி கூறுங்கள் அரசே!” என்றான் கிழவன்.

66

தனக்கென்று கூறித்தான் கேட்டார். அரசே! தன் தலைக்கென்று கூறவில்லை. இது அவருக்குப் பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஐந்து விரல்களுக்கும் ஐந்து பொருந்தும். இரண்டை அவர் குழந்தைகளுக்கே சுண்டு விரல்களில் போடலாம்” என்றான் இளைஞன்.

சிரிப்பு இன்னும் அவையெங்கும் கலகலத்தது.

இளைஞன் அத்துடன் விடவில்லை. மேலும் பேசினான்.

"என்மீது குற்றமில்லை, ஆண்டே! கொடுத்த துணியில் நான் ஒரு தணுக்குக்கூட எடுக்கவில்லை. அத்தனையும் எடைக்கெடை சரியாய் இருக்கும். சொல்லப் போனால் நூலெடை தான் சற்றுக் கூடியிருக்கும்" என்றான்.அவன்.

"நீ முன்பே துணியை நிறுத்துப் பார்த்தாயா?"