பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250

66

அப்பாத்துரையம் - 39

"ஆம், அரசே!" என்று இளைஞன் முன் பின் எடைக் கணக்கைக் காட்டினான்.

மன்னன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.அவன் மூளை என்ன முடிவு காணக்கூடுமோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

அவன் அமைச்சரை நோக்கினான்."இதில் முடிவு கூறுவது மிக எளிதே. இதற்குச் சட்ட அறிஞர் உதவி தேவைப்படாது. கிழவன் பேராசைப்பட்டான். அவன் துணியை அவன் இழக்கட்டும். இளைஞன் குறும்புக்காரன், அவன் செய்த உழைப்பை அவன் இழக்கட்டும். தொப்பிகள் அரசியல் உடைமையாகட்டும்" என்றான்.

66

அவை எதற்குப் பயன்படும், அரசே!' என்று அமைச்சன் ஆவலுடன் கேட்டான்.

“ஏழைச் சிறுவர் குழந்தைகளுக்கு அவை விளையாடக் கொடுக்கப்படும்!" என்றான் மன்னன்.

மன்னன் முடிவை வழக்காடிகளே முனகாமல் ஏற்று மகிழ்ந்தனர். மக்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவேண்டியதில்லை. சட்ட அறிஞரும் அமைச்சரும் வியப்புற்றனர்.

அடுத்தபடியாகக் கோலேந்திய கோமான் ஒருவனும் குழைந்து நடந்த குள்ளன் ஒருவனும் வந்தனர்.

குள்ளன் பேசினான்: "மதி மன்னரே நான் இந்தக் கோமானுக்குச் சில நாட்களுக்குமுன் பத்து மாணிக்கங்களை இரவலாகக் கொடுத்தேன். அதைக் கேட்கச் சென்றேன். 'கைப் பிரம்பால் என்னை ஓங்கி, கொடுத்துவிட்டேன்டா, போ' என்றான். தேவரீர் உண்மை கண்டு என் பொருளை எனக்கு வாங்கித் தரும்படி வேண்டுகிறேன்” என்றான்.

மன்னன் கோமானை நோக்கினான்.

அவன் "நான்

கொடுத்துவிட்டேன்,

அரசே!

வேண்டுமானால் சத்தியம் செய்து சொல்கிறேன்” என்றான்.

மன்னன் இப்போது குள்ளனை நோக்கினான்.