பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

66

251

'அவன் தரவேயில்லை அரசே. எங்கே அவன் சத்தியம் செய்யட்டும், பார்ப்போம்! சத்தியம் செய்துவிட்டால், நான் என் பணத்தை இழக்க ஒப்புகிறேன்” என்றான்.

கோமான் முகம் குளிர்ந்தது. அதை மன்னன் கவனித்தான்.

அவன் குழைவுடன் குள்ளன் பக்கம் திரும்பினான். “அப்படியே நான் சத்தியம் செய்கிறேன். நீ இந்தக் கோலைச் சற்று வைத்துக்கொள்” என்றான்.

குள்ளன் கோலை ஏந்தினான், “கடவுள் சான்றாக, நான் மாணிக்கங்களை, இவன் கையில் கொடுத்துவிட்டேன். இது மெய், மெய், முக்காலும் மெய்" என்று கோமான் சத்தியம் செய்தான்.

குள்ளன் முகம் வியப்பில் ஆழ்ந்தது. ஆனால் அவன் கம்பைப் கோமான் கையில் கொடுத்துவிட்டுத் தன் வாக்குறுதிப் படி மன்னரை வணங்கிச் சென்றான்.

கோமானும் மன்னனுக்கு வணக்கம் தெரிவித்து விடை

பெற்றான்.

குள்ளன் தளர்ந்த நடையையும், கோமான் நிமிர்ந்த நடையையும் பட்டி மன்னன் கூர்ந்து கவனித்தான்.

அவன் இருவரையும் திரும்பவும் அழைப்பித்தான்.

அவன் கோமானிடம், “அந்தக் கோலை இப்படிக் கொடுங்கள்” என்றான்.

வியப்புடன் கோமான் அதைக் கொடுத்தான்.

மன்னன் குள்ளனிடம் அதைக் கொடுத்தான்.

“தம்பி, உனக்கு இதன் தேவை பெரிது. எடுத்துக்கொள். உன் மாணிக்கங்கள் இப்போது உண்மையிலேயே அடைந்துவிட்டன” என்றான்.

உன்னை

குள்ளனுக்கு ஒன்றும் புரியவில்லை. “அது எப்படி, அரசே! இந்தக் கோல் எங்கே, என் ஒப்பற்ற மாணிக்கங்கள் எங்கே?” என்றான்.