பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




252

அப்பாத்துரையம் - 39

‘எங்கே என்று காட்டுகிறேன் பார்" என்று கூறி மன்னன் கோலை வாங்கி முறித்தான்.

மாணிக்கங்கள் தெறித்து விழுந்தன. எடுத்துப் பார்த்த போது பத்து மாணிக்கங்கள் சரியாய் இருந்தன.

குள்ளன் மன்னனுக்கு வணக்கம் செய்து மாணிக்கங் களுடன் சென்றான்.

இத்தடவை மக்கள் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அமைச்சரும், சட்ட அறிஞரும் இப்போது அவன் காலடியில் விழுந்தனர். "இனி எங்களுக்குச் சட்டமும் வழக்கும் தேவையில்லை அரசே! நீங்களே இனி எங்கள் சட்டம், நீங்கள் இனி இந்த நாட்டின் வழக்கத்துக்கு மூல முதல். இனி உங்கள் சட்டம்தான் நாட்டுச் சட்டம்" என்றனர்.

பட்டி மன்னன் சிரித்தான்.

66

"ஆம். ஆனால் இதைச் சொல்லும் நீங்கள்தான் அந்தச் சட்டத்துக்கு மேல்வரி. இதைப் பார்த்து ஆரவாரத்துடன் வரவேற்றார்களே இந்த மக்கள்தான் அதன் அடிவரி” என்றான்.

பட்டி மன்னனிடம் வந்த மூன்றாவது வழக்குக் குடும்ப வழக்காயிருந்தது. பொது வழக்குகளில் இருதரப்புகள்தான் இருக்கும். இந்தப் புதுமையான வழக்கில் மூன்று தரப்புக்கள் இருந்தன.

ஒரு பெண்ணை ஒரு இளைஞன் புலியிடமிருந்து காப்பாற்றினான். இளைஞன் அவளை மணம் செய்து கொள்ள விரும்பினான். அவளும் இணங்கினாள். ஆனால் அவள் அன்னை அவளைத் தன் அண்ணன் பிள்ளைக்கு வாக்களித்திருந்தாள். அவள் தந்தையோ அவளைத் தன் தங்கை மகனுக்கு வாக்களித்திருந்தான்.

பெண் தன்னைக் காதலித்தவனுக்குத்தான் மாலையிட வேண்டும் என்றாள். தந்தை தன் மடியில் தவழ்ந்த தன் தங்கை மகனுக்கே அவள் உரிமையாக வேண்டும் என்றான். “என் அண்ணன் மகன் பிறந்த பின்பே மற்ற இருவரும் பிறந்தனர். முதல் வாக்குறுதி அவனுக்கே உரியது” என்றாள்.