(254) ||__
அப்பாத்துரையம் - 39
தனக்கென வகுத்துக் கொண்ட தனிவேலை முறைகளும் மற்றும் பதினைந்து நாழிகைகளை நிறைத்தன. போக இருபத்தைந்து நாழிகையும் அவன் அயர்ந்து தூங்கினான்.
ஒருமாத ஆட்சிக்குப் பின் மன்னனது அயர்ந்த தூக்கத்துக்கு உலை வைக்கப்பட்ட து.
“நள்ளிரவில் திருடர், திருடர்!தீவட்டிக் கொள்ளைக்காரர்” என்ற கூக்குரல் எழுந்தது.
காவலர் அரசனை வந்து எழுப்பினர். அவன் சீறினான். "நான் பட்டி மந்திரி, பாரத வீரனல்ல. போய்த் திருடரை நீங்கள் வேட்டையாடுங்கள்" என்றான் மன்னன்.
அமைச்சர்களுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அதை மறைத்தனர். வெளிப்படையாக அவர்கள் மன்னர் கடமையை நினைவூட்டினார்கள். “மற்றெல்லாக் கடமைகளையும் போலவே, இவற்றிலும் நீங்கள் நேர் நின்று நடத்த வேண்டும். இது மன்னர் கடமை” என்றனர்.
பட்டி மன்னன் புறப்பட்டான்.கொள்ளையிட்டவர்கள் ஒரு சிலர்தான்.பட்டி மன்னன் வீரர்களே அவர்களைப் பிடித்து வந்தனர்.
“நீங்கள் ஏன் திருடினீர்கள்!” என்று மன்னன் கேட்டான். “வறுமைதான் காரணம்" என்றனர் அவர்கள்.
“என் நாட்டில் குடியேறுங்கள். உங்கள் வறுமை போய் விடும். இங்கே உழைப்பவர்களுக்கெல்லாம் ஊதியமுண்டு" என்றான்.
அவர்கள் விழித்தனர். ஒருவன், “நாங்கள் ஏழைகளாக உழைத்து வாழமாட்டோம். அதைத்தான் வறுமை என்கிறோம்” என்றான்.
உ
'ஓகோ! நீங்கள் முதலில்லாமலே முதலாளிகளாக விரும்புகிறவர்களா? சரி, உங்களுக்கு உழைத்து வாழ விருப்ப மில்லையென்றால், இந்நாட்டில் உங்களுக்கு இடமில்லை. உங்களைத் தூக்கிட உத்தரவிடவேண்டும்!' என்றான்.