மருதூர் மாணிக்கம்
அவர்கள் இப்போது வழிக்கு வந்தனர்.
255
காவலிலிருந்தே இவர்கள் முதலில் தங்கள் பிழைப்புக்கு உழைக்கட்டும். ஊதியத்தில் பாதி அவர்கள் நன்னடக்கைக்காக அரசியலார் வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு மூன்றாண்டு ஒழுங்குடன் வாழ்ந்தால், நன்னடக்கைத் தொகையுடன் விடுதலையும் தரப்படும். அரசியலார் நம்பிக்கையைப் பெற்றால் மேலும் உதவிகள் தரப்படும்" என்று மன்னன் முடிவு செய்தான்.
அடுத்த நாள் முதல் கொள்ளைக்காரர் தொகை பெருகிற்று. அவர்கள் பெரும் படையுடன் நாட்டையே தாக்க வந்து விட்டதாக ஓரிரவு செய்தி வந்தது. போரும் மும்முரமாக நடைபெற்றது.வேண்டா வெறுப்பாக மன்னன் களம் சென்றான். அன்றும் வெற்றி கிடைத்தது. ஆனால் மன்னன் உடலெல்லாம் குத்தும் இடியும் பட்டு நொந்தன.
"போர் செய்யாத அரசைத்தான் நான் விரும்பினேன். இது எனக்கு வேண்டாம். நாளையே இதைத் துறந்து விட்டு, வந்தபடியே மீண்டு விடுகிறேன்” என்று மன்னன் முடிவு செய்தான்.
அவன் கொலுமன்றம் கூட்டினான். முடிவைத்
தெரிவித்தான். குடிகளும் அமைச்சரும் மனமார வருந்தினர். “இனி நீங்கள் களத்துக்குச் செல்லாமலே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களைப் போன்ற நல்ல அரசர் நூற்றுக்கு ஒருவர். ஆகவே நீங்கள் எங்கள் மன்னராகவே என்றும் இருக்க வேண்டும்" என்று அவர்கள் தொழுது வேண்டினர்.
“என்னிடம் உங்களுக்கு உள்ள பற்றுக்கும் மதிப்புக்கும் நன்றி. அந்த அளவுக்குக் குறுகிய காலத்திற்குள் என் ஆட்சியில் நான் அடைந்த வெற்றி பெரிதுதான். நான் அரசு துறக்கும் நேரத்தில், இப்படி மகிழ்ச்சியுடன் செல்லும் இந்த வாய்ப்புக்கு நான் மகிழ்கிறேன். ஆனால் என் செல்வப் பேராசையா லேயே ஆட்சியை விரும்பினேன். உங்கள் ஆட்சியிலேயே எனக்கு ஒரு நல்ல படிப்பினைக் கிடைத்துவிட்டது.
உழைத்து வரும் செல்வம்தான் உண்மைச் செல்வம். உழையாத செல்வத்தை நாடித்தான் திருடர், கொள்ளைக்காரர், சல்வச் சீமான்கள், மன்னர் பாடுபடுகின்றனர். முதலிரு