256 ||
அப்பாத்துரையம் - 39
வகையினரையும் அடக்குவதற்காகவும், மூன்றாவது வகையினரை அவர்களிடமிருந்து காப்பதற்காகவுமே மன்னர் காவற்படை வைத்திருக்கின்றனர் என்பதைக் கண்டு கொண்டேன்.
"ஒரு மன்னரைப் போலவே உழையாதவர் கூட்டுறவின் தலைவனான இன்னொரு மன்னன் வருகிறான். இருவரும் உழையாத செல்வத்துக்காகப் போரிடுகின்றனர். எனக்கு இந்த உழையாத செல்வமும் வேண்டாம். அதற்கான ஆட்சியும் வேண்டாம்.
"பாரத வீரனைப்போல நான் வீரனல்ல. ஆனால் அந்த வீரம் என்னிடம் இல்லாவிட்டாலும் அதை நான் மதிக்கிறேன். உங்கள் மன்னர் வீரமும் எனக்கு வேண்டாம், அதன் செல்வத்தையும் நான் இனி நாட மாட்டேன்.
"குடியானவனாக நான் வந்தேன். குடியானவனாகவே நான் உங்களை விட்டுச் செல்வேன்.
"இங்கே நான் உழைத்து ஈட்டிய செல்வத்தைக்கூட நான் உங்களுக்குத் தந்துவிட்டுப் போகிறேன். என்னை மறவாத என் கழுதையை மட்டும் இட்டுக் கொண்டு நான் செல்கிறேன்” என்று பட்டி கூறி முடித்தான்.
“அந்தோ, நம் நல்வினைப்பயனால் ஒப்பற்ற ஒரு முனிவனை அரசனாகப் பெற்றோம். அறியாமையால் அவரை இழந்தோம்” என்று மக்களும் அமைச்சர் குழுவும் அழுதனர். ஆனால் பட்டி மன்னன் அசையவில்லை. முடி, பட்ட அணிமணி, உரிமைகள் யாவும் அகற்றினான். பழைய பட்டி மந்திரியாக நின்றான். தன் தனிப்பட்ட வருவாயின் கணக்குடன் வருவாயையும் அமைச்சரிடமே கொடுத்து விடைபெற்றான். தன்னுடன் வழிகாட்ட ஒருவரன்றி வேறு யாரும் வரவேண்டாம் என்றும் உத்தரவிட்டான்.
காட்டு வழியே அவன் தனியே நடந்து வந்தான்.
தனிக்காட்டுப் பண்ணை மன்னன் ஒற்றர் சிலர் மட்டும் அவனை அறியாமலே அவனுக்குக் காவலாகச் சென்றனர்.
ம்
மூன்று நாட்கள் பட்டிநாடெங்கும் மக்களனைவரும் ஆராத்துயரில் அழுந்தியிருந்தனர். அதன்பின் அமைச்சர் குழுவே