பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

257

ஆட்சி ஏற்றது.பட்டி மந்திரியின் உருவம் அவன் இன்றியமையாத் தோழனான கழுதையுருவுடன் நகரத்தின் நடு நாற்சந்தியில் எழுப்பப்பட்டது. அதை மக்கள் கிட்டத்தட்ட தம் நாட்டின் தெய்வமாகப் பேணினர்.

கால்நடையாக வந்த பட்டி மந்திரியைப் பாரத வீரன் ஆர்வத்துடன் எதிர்கொண்டு அழைத்தான். அரசு துறந்ததற்கான விளக்கங்களைக் கேட்டதும், அவன் பின்னும் ஆர்வத்துடன் அவனைத் தழுவிக் கொண்டான். “இராமாயண பாரத வீரரின் வீரம் உனக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் அந்த வீரம் போற்றிய வீட்டுமாச்சாரி சனகர் முதலிய பெரியோர் மரபில் உனக்குக் கட்டாயம் இடம் உண்டு. உன்னைப் பாங்கனாகப் பெற்றதில் நான் பெருமை அடைகிறேன்” என்றான்.

மக்கள் பாராட்டைவிடப் பன்மடங்கு தன் தலைவன் பாராட்டுப் பட்டி மந்திரிக்கு அகமகிழ்வளித்தது.