பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

259

பாங்கன் பணியை இன்னும் உயர்வுடையதென்றே கருதுகிறேன்” என்றான்.

தனிக்காட்டு மன்னன் இப்போது பட்டியின் வாயைக் கிளறினான். “மன்னரையும் மன்னர் வீரத்தையும் போரையும் நீங்கள் விரும்பவில்லை. அப்படியிருக்க, ஒரு வீரன் பாங்கனா யிருப்பதை மட்டும் எப்படி விரும்பமுடியும்?" என்று கேட்டான்.

பட்டியின் விளக்கம் இருவருக்கும் ஒரு புதிய அரசியல் தத்துவ போதனையாய் அமைந்தது.

“மன்னிக்கவும் அரசே! நான் மன்னரை வெறுக்கவில்லை. தங்களைப் போன்ற மன்னரிடம் நான் கொண்ட பற்றும் மதிப்பும் பெரிது. வீரரை வெறுக்கவில்லை. பாரத வீரனை நான் தெய்வீக வீரனாகவே கருதுகிறேன். ஆனால் மன்னர் பதவியை நான் விரும்பவில்லை. வீரர் நிலையையும் விரும்பவில்லை.

இன்னும் சொல்லப் போனால் உங்கள் இருவரிடமும் நான் விரும்பும் பண்பு மன்னர் பண்போ, வீரர் பண்போ அல்ல. மன்னர் செல்வமும் அதிகாரமும் விரும்புகின்றனர். தாங்கள் அதை நன்கு பயன் படுத்து கிறவர் மட்டுமே. வீரரும் செல்வம், அதிகாரம் ஆகியவற்றுக்காகவேபுகழ்விரும்புகின்றனர். அவற்றுக்காகவும், அவற்றைப் பெற்ற பின்னும் கொடு மைகள் செய்கின்றனர்.பாரத வீரனோ புகழ் ஒன்றுக்காகவே பாடுபடுகின்றார்.அதுமட்டுமல்ல! வீரர் அச்சமற்றவர் போல நடிக்கின்றனர். கட்டாயம் சாவு என்றால் துணிந்து செல்ல மாட்டார்கள். பாரத வீரன் அப்படியல்ல. சிங்கப்போரும் வாகைப்போரும் அதற்குச் சான்றுகள் தரும்!” என்று பட்டி மந்திரி விளக்கம் தந்தான்.

மன்னன் பட்டி மந்திரியின் அறிவு விளக்கத்தின் உண்மை கண்டான். தான் விளையாட்டாகவே இருவரையும் பெருமைப் படுத்தினாலும், அவர்கள் தகுதி அவர்களை நாடகமாட்டு விப்பவர் காணாத அருந்தகுதி என்பதை அவன் உணர்ந்தான்.

மனமார மன்னன் அவர்களை விட்டுப்பிரிய விரும்ப வில்லை. ஆயினும் பாரத வீரன் உலாவைத் தொடர வேண்டும் என்று வற்புறுத்தியபோது, தொடங்கிய காவிய முடிவை எண்ணி ஒத்துக்கொண்டான்.