(260
அப்பாத்துரையம் - 39
பாரத வீரனும் பட்டி மந்திரியும் தனிக்காட்டு மக்களிட மிருந்தும், மன்னர் அரசி முதலியவரிடமிருந்தும் விடைபெற்றனர்.
அவர்கள் இப்போது கிழக்கு நோக்கித் திரும்பினர். பாரத வீரனுக்கு இப்போது ஒரே ஒரு கவலைதான் இருந்தது. ளவரசியின் மீதுள்ள மாயம் அகலவேண்டுமானால், பட்டி மந்திரியின் மனமார்ந்த இணக்கம் வேண்டும். அதைப்பெற என்ன வழி என்பதே அவன் சிந்தனையாயிருந்தது.
பாரத வீரன் சிந்தனையைப் பட்டி மந்திரி அறிந்தே இருந்தான். ஏனென்றால் அதை மணிப் புலவன் பக்குவமாக அவனுக்கு எடுத்துரைத்திருந்தான். அதைப் பாங்கன் ஒத்துக் கொள்ளும் வகையில் அவன் பட்டிக்குத் திட்டத்தின் எதிர் திட்டம் வகுத்துக் கொடுத்திருந்தான்.
“நான் பத்தாயிரம் அடி பெற வேண்டுமானால், நீங்கள் உலாவை முடித்து வீடு திரும்பி விட வேண்டும்” என்று எதிர் திட்டம் போடும்படி அவன் பட்டி மந்திரியைத் தூண்டி யிருந்தான். வீடு திரும்பியபின் தானே மெல்ல அடித்துக் கணக்குத் தீர்த்துவிடுவதாகவும் அவன் கூறியிருந்தான்.பட்டிமந்திரி இதை ஏற்றான் என்று கூற வேண்டுவதில்லை. அவன் பாரத வீரனிடம் கனாயிருக்க விரும்பினா உலாவில் சலிப்புக் கொண்டிருந்தான்.
உலாவை முடிக்கும் முறையில் மணிப்புலவனை விட இன்னொரு சாராரும் தீவிரமாக முயன்று வந்ததுண்டு. அதுவே கோமாறனும் நன்னயப்பட்டரும், செல்லாயியும் செங்காவியும் இதில் அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்தனர்.
“பாரத வீரனுடன் யாராவது ஒருவர் சென்று வீரராகவே மல்லாட வேண்டும். தோற்றவர் முயன்றவர்க்குக் கீழ்ப்படிந்து அவர்கள் சொற்படி நடப்பது என்ற உறுதியை மற்போருக்கு முன்பே பெற வேண்டும். கூடிய மட்டும் பாரத வீரனை எப்படியாவது வென்று உறுதிப்படி அவனை மீட்டு வர வேண்டும்,” இந்தத் திட்டத்தை எல்லாரும் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் யார் போவது? எப்படி வெல்வது? இதற்கென்று பயிற்சி செய்து தேர்ச்சி பெற்றவன் போகலாம் என்றான் கோமாறன். நன்னயப்பட்டரோ சூழ்ச்சியாலேயே வெல்லலாம்