பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




262

அப்பாத்துரையம் - 39

என்னுடையன ஆக்கிக் கொண்டேன். ஆகவே நான்தான் இப்போது பாரத வீரன்” என்றான்.

பாரத வீரன் உடனே இருட்டிலேயே அவன்மேல் போர் தொடுத்தான்."நீ அண்டப்புளுகன். இதோ பார் நான்தான் பாரத வீரன். எங்கே, உன் புளுகுகள்? இதோ பாரத வீரன் குத்து! இதற்குப் ‘பதில் கூறு!' என்று தொடங்கினான்.

கோமாறன் இவ்வளவு விரைவில் போரை எதிர்பார்க்க வில்லை. அவன் திட்டத்தின் பாதி தோற்றது. ஆயினும் அவன் தன் முழுத்திறம் காட்டிப் போரிட்டான்.பாரத வீரனை நேருக்கு நேர் போரில் வெல்வது எளிதல்ல என்று அவன் கண்டான். இதற்குமுன் நண்பனாகவே இருந்ததால், பாரத வீரன் கையாற்றலை அவன் சரியானபடி மதிப்பிடவில்லை.

அவர்கள் போர் முடியுமுன் கிழக்கு வெளுத்துவிட்டது. பட்டி மந்திரி அவன் பயங்கரத் தோற்றம் கண்டு நடுங்கினான். ஆனால் அச்சமயத்தில் சிங்க முகத்தின் பூட்டுக் கழன்றிருந்தது. கோமாறன் வேலையாள் அதைச் சரிசெய்ய அணுகினான். ஆனால் மற்போரினிடையே கை தட்டி முகம் கீழே விழுந்து உடைந்தது. மாற்றுருவம் நீங்கி, சிங்கமுகாசுரன் கோமாறனாய் நின்றான்.

பாரத வீரன் வியப்புற்றான், போரை நிறுத்தினான்.

போரில் இருவர் நோக்கமும் பாழாயிற்று. கோமாறன் திட்டமே குலைவுற்றது. பாரத வீரனுக்கோ சிங்கமுகாசுரனை வென்ற புகழ் வீணாயிற்று. ஆயினும் நண்பர் பகைமை விட்டுக் கலந்துறவாடினர். ஒருவருக்கொருவர் விளக்கங்கள் கூறினார்கள். கோமாறன்மட்டும் திட்டமுழுவதையும் கூறவில்லை. நன்னய பட்டர் திட்டத்திற்குள்ள இடத்தைக் கெடுத்துக் கொள்ள வில்லை. உலா முடித்துத் திரும்பி வரும்படி அவன் பாரத வீரனை கெஞ்சிக் கேட்டுவிட்டு மீண்டான்.

அவன் கெஞ்சுதல் பயன்தரவில்லை.

கோமாறன் வீரத்தால் நிறைவேற்ற முடியாததை நன்னயப் பட்டர் சூழ்ச்சியால் நிறைவேற்றினார். அவர் இராமாயண பாரத ஏடுகளை ஒரு பெட்டியில் அடைத்துக் கொண்டார்.