மருதூர் மாணிக்கம்
263
மாற்றுருவுடன் கோமாறனைப் போலவே அதனுடன் சென்றார். பாரத வீரனுடன் அவரும் அளவளாவிப் பேசினார்.
66
“அன்பரே உம் வீரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது வீர உலகின் உச்சியை அடைந்து விட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இதை உடைத்து, இதனுள் இருப்பதைச் சுக்கு சுக்காகக் கிழிக்கும் ஆற்றல் உமக்கு இருக்க முடியாது. ஏனெனில் அத்தகைய மாய வீரம் இதில் இருக்கிறது. இதில் உம்மைச் சோதிக்க எண்ணுகிறேன்" என்றார்.
66
‘அது பெட்டியாய் இல்லாமல் மலையாய் இருந்தாலும், நான் உடைத்துவிட முடியும். அதனுள் இருப்பது வைரப் பாளங்களானாலும் நான் என் வாளால் கிழித்து விடுவேன். இது உறுதி! என்ன சொல்கிறீர்?" என்றான் பாரத வீரன்.
நன்னயப்பட்டர் இத்தறுவாய்க்கே காத்திருந்தார். “நீர் இதைக் கிழித்தால், நான் உம் பாங்கருக்கும் பாங்கராய் உம் பின்வருவேன். என் புகழ் முழுதும் உமது ஆய்விடும். உம் புகழ் பாடும் கடமையை ஏற்பேன். ஆனால் கிழிக்காவிட்டால். நான் சொல்கிறபடி நீர் கேட்க வேண்டிவரும். உம் உலாவை நிறுத்தி, என் ஆளாய் என்னுடன் வந்து வாழ வேண்டும்" என்றார்.
பாரத வீரன் இதை ஏற்றான்.
நன்னயப் பட்டர் பின்னும் தன் திட்டத்தை வலியுறுத்தினார். “நான் இன்னொரு முறை எச்சரிக்க விரும்புகிறேன். பெட்டியினுள் இருப்பதை நீர் காணவில்லை. கண்டால் உம் கருத்து மாறலாம். வேண்டுமானால் பார்த்து விட்டுப் பந்தயத்துக்கு எடுத்துக் கொள்ளும்” என்றார்.
66
அது மலைப்பாம்பாயிருந்தாலும் அதைக் கண்டு நான் மயங்க மாட்டேன். பார்க்காமலே பந்தயத்துக்கு ஒத்துக் கொள்கிறேன்” என்றான்.
நன்னயப் பட்டர் தம்மிடமிருந்த ஒரு குழலை எடுத்து ஊதினார்.
கோமாறனும் செல்லாயியும் செங்காவியும் வேறு பல செல்வமருதூர் நண்பர்களும் அருகிலேயே வந்து காத்திருந் தார்கள். குழல் ஊதியதும் அவர்கள் வெளி வந்தார்கள்.