மருதூர் மாணிக்கம்
265
அத்தை, மருமகள் ஆகிய இருவரிடமும் அவன் இன்மொழி புகன்றான்.
அத்துடன் பட்டி மந்திரியை அவன் கூப்பிட்டான்.
"அன்பனே, உலா முடிந்தது. இனி என் கவசத்தையும் தலையணியையும் மெல்ல அகற்றிவிடு. நாம் வீட்டுக்குப் போவோம்” என்றான்.
பட்டிமந்திரி இத்திடீர் மாறுதலை நம்பக்கூடவில்லை. இது தோல்வியின் கசப்பா, உள்ளார்ந்த மாறுதலா என்று அறியாது அவன் தயங்கினான்.
பாரத வீரன் மீண்டும் உறுதி கூறினான்.
66
'வீரத்தால் நான் இதுவரை வென்றேன். ஆனால் அறிவால் தோற்றேன். நான் இதுவரை அறிவைப் பறிகொடுத்திருந்தேன். இனி என் திட்டங்களை நான் திருத்தியமைக்க வேண்டும், அல்லது கைவிடவேண்டும். ஒன்று மட்டும் உறுதி. இனி நான் அறிவைத்தான் தீட்ட வேண்டும். இத்தோல்வி என் உடலின் ஊக்கத்தையே அகற்றிவிட்டது” என்றான்.
செல்லாயி, "அப்படிச் சொல்லாதே, தம்பி! இரண்டு நாளில் உடம்பு சரியாய்விடும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். போதாக்குறைக்குச் செங்காவி இருக்கிறாள்" என்றாள்.
செங்காவி முகம் கோணிச் சிணுங்கினாள்.
பாரத வீரன் மேலும் பாங்கனிடம் பேசினான். “உனக்கும் இந்த ஆறு மாதத்திலும் நான் என் பழைய வாக்குப்படி, முந்நூறு வெள்ளி தரவேண்டும். அதை நான் இரட்டிப்பாக்குகிறேன். இது உனக்காக அல்ல. உனக்குத்தான் செல்வப் பற்றுப் போய் விட்டதே. இது உன் குடும்பத்துக்காக பெண்களை...
66
"அண்ணலே! உங்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு தருவேன். அது செல்வத்தைவிட அருமையானது. செல்வத்தின் பற்றை அகற்றியது அதுவே, இனியும் அந்த அன்புக்கே நான் அடிமை” என்றான்.