பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




266

அப்பாத்துரையம் - 39

எல்லாரும் செல்வமருதூர் சென்று சேர்ந்தனர். சீடர்களில் பலர் அங்கிருந்தனர். மற்றவர்களும் பாரத வீரன் வரவு கேட்டு வந்து சேர்ந்தனர். பாரத வீரனை அவர்கள் ஆர்வத்துடன் வந்து கண்டார்கள். அவன் மாறுதல் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் உள்ளூர மகிழ்ச்சியும் கொண்டார்கள். அவன் உடல் நலிவு கண்டு கவலையுடன் அவர்கள் அவனுக்குப் புது வகையான பணிவிடைகள் செய்தார்கள்.