இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8
அப்பாத்துரையம் - 39
கைக்கொள்ளும் ஆற்றலுக்கு அல்லது உரிமைக்கு ஓர் அறிகுறி. கொடிபேரரசினைக் குறிப்பினும் அது பேரரசாகாதன்றோ? மணி முடியும் செங்கோலும் அரசாட்சிக் கறிகுறியான அரசன் அணிகலன்கள் ஆயினும் அவையே அரசாட்சி ஆகா அல்லவா? அது போலவே பொன் செல்வத்தின் மதிப்பீடு மட்டுமேயன்றி நேரிடையான உண்மைச் செல்வமாகாது. அவ்வுண்மைச் செல்வத்திற்குப் பொன் எவ்வகையில் அறிகுறியாயிற்று என்று பார்ப்போம்.